பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுடர்வி வேங்கை

பாட்டுடைத் தலைவன்

தமிழ்நாடாண்ட, கடைச்சங்க கால மூவேந்தர் பலர் என்ருலும், சோழ ர் க ளி ல் கரிகாற் பெருவளத்தான்ும், பாண்டியர்களில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும்போல், சேரர்களில் தலைசிறந்து விளங்கினவன், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனவன். சேரருள் சிறந்தவன் இவனே ஆ த ல் பே ல், அக்காலத் தமிழரசர் அனைவரினும், ஒருவகையால் சிறந்தவனும் இவனே ஆவன். தமிழ் அரசர் எவர்க்கும் இல்லாத தனிச்சிறப்பு, இச்செங் குட்டுவனுக்கு உண்டு. 'சதுர்மறை ஆரியம் வருமுன் சகமுழுதும் வழங்கிய அநாதியான முதுமொழி தமிழ் : கல்தோன்றி மண்தோன்ருக் காலத்தே தோன்றிய முதுகுடியிற் பிறந்தவர் தமிழர்; ஆரியரும், ஆங்கிலேயரும், பிற ஆசிய இனத்தாரும் நாகரிகம் அற்று, நாடோடிகளாய்த் திரிந்து வந்த அந்தக் காலத்திலேயே, நாகரிகம்பெற்று நாடாண்டு வந்த தமிழ் அரசர்’ எனப் பெருமைப்பட முடியுமே ஒழிய, அவர்கள், இத்துணை ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றியவர்; அம்மரபு மன்னர்களுள் இன்னர், இன்ன காலத்தில் வாழ்ந்திருந்தனர், என வரையறுத்துக் கூறத்தக்க வரலாற்றுச் சான்றுகள், தமிழகத்திற்கு இ ல் லை என்ற குறைபாட்டை நீக்கிய, முதல் தமிழ்அரசன், செங்குட்டுவன் ஒருவனே.

மெளரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, வடநாட்டில் சிறப்பாக அரசாண்ட ஆந்திர அரச இனமாய், வடமொழியில் சதகர்னி என்றும், தமிழில் நூற்றுவர்கன்னர் என்றும் அழைக்கப்பெறும் ஓரினத்தில் பிறந்து, வடநாட்டு வரலாற்றுப்