பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் பலராலும, கி. பி. 166-196 ஆண்டுகளில் அரியணையில் வீற்றிருந்தான்் என, ஒருமுகமாக ஒப்புக் கொள்ளப்பட்டவனாகிய, யக்ஞபூரீ என்ற, நூற்றுவகன்னன் துணையால் கங்கையைக் கடந்து, இமயமலையில் கல்கொண்ட நிகழ்ச்சியாலும், இலங்கைச் சாஸனங்கள் பலவும், கி.பி.171 முதல் 193 வரை இலங்கையை ஆண்டவன் என, அழுத்தம் திருத்தமாக அறிவிக்கும், கயவாகு என்பாளுேடு நட்புறவு கொண்டு, அவனைக் கண்ணகிக்குத், தான்்எடுத்த விழாக்கான அழைத்திருந்தான்் என்ற நிகழ்ச்சியாலும், தான்் ஆட்சி மேற் கொண்டிருந்த கடைச்சங்ககாலம், கி. பி. முதல் இரு நூற். ருண்டுகளைச் சார்ந்ததாகும் என்பதை நிலைநாட்டி, காலம் காணமாட்டாமல் கிடந்த தமிழகவரலாற்றிற்குக், காலம் காட்டும் கருவியாய் அமைந்து சிறப்புற்ருன் செங்குட்டுவன்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், சோழன்மணக் கிள்ளியின் மகளாகிய நற்சோணையும் பெருந்தவம் பல புரிந்த. தன் பயனுய்க், காளைமீதுமர்ந்து காட்சி நல்கும் கண்ணுதற் கடவுளின் தண்ணருளால்வந்து பிறந்தவன், இச்செங் குட்டுவன். இவன், 'மன்னர் மன்ன! நினக்குப்பின் நின் நாடாளும் நல்லூழ், நின்மக்கள் இருவருள் இளையோன் பாலே நன்கு அமைந்துள்ளது” என, நிமித்தகன் கூறின ளுயினும், மூத்தோன் இருக்க இளையோன் முடிபுனைவது முறையாகாது என்பதால், முற்றவும் துறந்த மூதறிவுடையா னும், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தை ஆக்கி அளித்தவ னுமாகிய, இளங்கோஅடிகளாரை இளையோனகவும், 'நம் அகடுை அடைந்த பத்தினிக்கடவுளைப் பரசல் வேண்டும்’ எனப், பத்தினி வழிபாட்டிற்கு வழி வகுத்தவளும், கணவன் கடமை மேற்கொண்டு பிரிந்துறையும் காலம், முப்பத்திரண்டு திங்கள் போலும் நீள்பெருங்காலமாயினும், ஊனும் உறக்கமும் ஒழித்து, அழகிய ஆடையும், அரிய அணியும்

6