பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகற்றி வாழ்வதே நற்குடிப் பிறந்த நங்கையர்தம் நல்லியல் பாம் என்பதை, வாழ்ந்து காட்டிய விழுச்சிறப்புடையாளு மாகிய, இளங்கோ வேண்மாளை மனைவியாகவும் பெற்ற பெருமைக்கு உரியவன், இச்செங்குட்டுவன்.

செங்குட்டுவன், வெற்றி பல பெற்ற வேந்தளுவன். மாண்டு மாண்புற்ற தன் தாய் நற்சோணையின் படிமத்தைக் கங்கையில் நீராட்டக்கருதி வடநாடு சென்ற தன்னை, அக் கங்கைக்கரையில் வந்துஎதிர்த்த, ஆரிய அரசர் ஆயிரவரையும் தான்் ஒருவனுகவே நின்று போராடி வெற்றி கொண்டான்.

தன் நண்பன் அறுகை என்பான், நாணித் தலைகவிழந்து நனிமிகச்சேயநாடு புகுந்து கரைந்துறையுமாறு பெருந் தோல்விபுறப் பண்ணிய, பழையன் மாறன்பால் பெருஞ்சினம் கொண்டு, அவனுக்குரிய மோகூர் அரணை முற்றி அழித்து, அவனுக்குத் துணைபுரியவந்த வேந்தர்களையும் வேளிர்களையும் வெற்றிகொண்டு, அவன் காவல் மரமாம் வேம்பினை வெட்டி, போர்முரசு பண்ணற்காம் சிறுசிறு துண்டுகளாக்கி, அவற்றை அவன் உரிமை மகளிர் முடிகளைந்து கொண்ட மயிர்திரித்து ஆக்கிய கயிற்ருல் பிணித்து, அவன் போர்க்களிறுகளைக் கொண்டே ஈ ர் த் து த் , தன் ஊர்க்குக் கொணர்வித்த தறுகளுளன் அக்குட்டுவன்.

கடலிடைத்தீவுகளை வாழிடமாக் கொண்டு, சேரநாட்டுக் கடல் வாணிகம் சிறக்கப், பொன்னெடு வந்து கறியொடு மீளும், மேலைநாட்டு வங்கங்களை வழிமடக்கிக், கொள்ளையிட்டு வந்தனர் கடம்பர் என அறிந்து, போர்க்கலங்களால் அப்பெருங்கடலைக் கடந்து, அக்கடம்பர்வாழ் தீவுகளை அடைந்து, அவர்களையும் கொன்று, அவர் காவல் மரமாம் கடம்பையும் வீழ்த்தி, அக்கடம்பர் குலத்தையே குலைத்து ஒழித்தான்்,

7