பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் அ ம் மா ன் இறந்தாகை, அவனுக்கு உரிய சோணுட்டு அரியணையில், தன்.அம்மான்சேய் அமரவொட்டாது கலாம்.விளைத்த சோழர் குலத்து வந்தார் ஒன்பதின்மரையும், நேரிவாயில் எனும் இடத்தே எதிர்த்துப் போராடி, ஒருநாட் போரிலேயே வெற்றிகொண்டு உரியோனை அரியணையில் அமர்த்தி அருந்துணைபுரிந்தான்்.

தன் நாட்டின் ஒரு பகுதியாகிய கொங்கு நாட்டின. ராகிய கொங்கர், சேரர்குலப் பகைவர்களாகிய சோழ பாண்டியரின் துணை தமக்குளது எனும் துணிவால், தனக்குப் பணிந்து கிடக்க மறுத்துத் தனியரசு வேட்கை யுடையராதல் கண்டு, அவர் தலைநகராம் கொடுகூரைத் தாக்கி, அவர்களையும், அவர்க்குத் துணைவந்த அப்பேரரசர் இருவர்களையும் வென்று, அவர்தம் வெற்றிக்கொடிகளையும் கைக்கொண்டு வாகை சூடினன்.

கண்ணகிக்குச் சிலை அமைக்கும் கல்லைப், பொதியமலை யில் கொண்டு, காவிரியில் நீராட்டிக் கொள்ளினும் இழுக் கில்லை ஆகவும், தன்போலும் பேரரசனுக்கு, அது பெருமைக் குரியதாகாது; இமயத்தே கல்கண்டு கங்கையில் நீராட்டிக் கொள்வதே தகவுடையதாம் என்ற உயர்ந்த நினைவாலும், வடவேந்தர் அனைவரும் ஒன்று திரண்ட, ஒரு திருமண நிகழ்ச்சியின்போது, ஆணவத்தால் அறிவிழந்து இமயத்தே கொடிநாட்ட தமிழரசர் இவண் வந்தபோது, எம்போலும் பெருமன்னர் ஈண்டு இல்லை போலும்” என உரைத்துத் தமிழரசரை இழித்துப் பேசிய கனகவிசயர்க்குத், தமிழர் திறம் இத்தகைத்து என்பதைக் காட்ட வேண்டுவது தன் கடமை யாம் என்ற கடமையுணர்வாலும், பெரும்படையோடு வட நாடு சென்று, வஞ்சினம் உரைத்தவாறே, கண்கவிசயரை வெற்றிகொண்டு, கண்ணகிசிலைக்கு எனக் கொண்ட கல்லை,

s