பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் தலைமீதே வைத்துத் தமிழகம் அடைந்த தலைமைசால் சிறப்புடையவன் செங்குட்டுவன்.

இவைபோலும் பெரு வெற்றிகளேயல்லாமல், கடற்கரையைச் சார்ந்த, மலைநாட்டகத்ததாகிய வியலூர் எனும் இடத்திலும், தேவாரப் பெற்ற சோனுட்டுத் திருப்பதியாகிய இடும்பாவனம் எனும் இடத்திலும் பெற்ற வெற்றிகள் குறித்தும், புலவர்கள் இவனைப் பாராட்டியுள்ளனர்.

தமிழகத்து அரசுகளேயல்லாமல் வடபேரிமயம் வரைப் பரவிய வடநாட்டு வேந்தர்களும் வணங்கி, ஏவல் கேட்கப் பேரரசு செலுத்திய செங்குட்டுவன், அப்பெருநிலையால் செருக்குற்றுச் செங்கோல் மு ைற ைய மறந்தவனல்லன். கண்ணகிச் சிலம்பின் அகத்திடுபரலாம் மணிகண்டு, 'பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானே அரசன்? யானே கள்வன்; மன்பதை காக்கும் தென்புலக்காவல் என் முதல் பிழைத்தது , கெடுக என் ஆயுள்' எனமொழிந்தவாறே மயங்கி வீழ்ந்து, உயிர்துறந்தான்் மன்னவன் எனக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனர் கூறக் கேட்டதும், கோல் கொன்று குடிஅழித்த தன்குற்றம், தன்போலும் பிறபேரரசர் செவி சென்றுபுகாமுன்பே, வல்வினை வளைத்த கோலைத், தன் நல்லுயிர், நிமிர்த்துச் செங்கோலாக்குக என்பான்போல் உயிர்துறந்து உயர்ந்து விட்டான் பாண்டியன்’ எனப் பாண்டியன் பெருமை பாராட்டியதோடு அமையாது, 'மழை, தன்பெய்யும் தொழிலை மறப்பினும், மக்கள் மன்னனையே நோவர் ஆ த லி ன், மழை பொய்ப்பினும் மன்னர்க்கே அச்சமாம்; உயிர்கள் வேறுபிற இயற்கையளிக்கும் இடையூறு களால் வருந்தநேரினும், மக்கள் வேந்தனையே பழிப்பர்; ஆதலின் அவைகண்டும் அரசர் அஞ்சுதல் வேண்டும். குடி மக்கள்பால் மிகுஇறைபெற்றே அரசு நடத்த விரும்பின், அது

9