பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுங்கோலாம் ஆ த லி ன் அந்நிலைக்கும் அரசராவார் அஞ்சுதல் வேண்டும்; ஆகவே உலகாளும் அரசர் குடியில் பிறப்பார்க்குத், துன்பமல்லது இன்பவாழ்வு என்றும் இல்லை’ என, அரசியல் அமைப்பின் அடிப்படை இயல்பைப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் கூறிய கூற்றாலும், அவன் கோலாட்சியின் நலம், குன்றில் ஏற்றிய விளக்கென நின்று விளங்குவது காண்க. அவன் ஆட்சி, அறத்தொடுபட்ட நல்லாட்சியாதல் க ண் டு களிப்புற்றமையால் அன்ருே பாண்டிய நாட்டில், தன் கணவனை இழந்த கண்ணகி, தாங்கள் பிறந்த சோழநாடு, தங்கள் வாழ்வைக் குலைத்த வான்பழி யுடையது என்ற கருத்துடைமையால், ஆங்குச் செல்லாது, சேரநாடு புகுந்தாளாகவும், "அவள் பாண்டியன் இழைத்த பிழைக்கேற்ற தண்டம் அ எளி க் கு ம் தகுதியுடையாய் நீ என்பதால் அன்ருே, நின்பால் முறையிடுவாள் போல் நின்ளுடு புகுந்தாள்-'கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை, இற்றெனக்காட்டி இறைக்கு உரைப்பனள்போல், தன்னுட்டு ஆங்கண் தனிமையிற் செல்லாள், நின்னுட்டு அகவயின் அடைந்தனள் நங்கை' - எனக்கூறி, அவனைப் பாராட்டியுள்ளார் புலவர் சாத்தனர். மேலும், கண்ணகிச் சிலைக்காம் கல்கொணர்வான்வேண்டி வடநாடு நோக்கிப் படையொடு புறப்படும் நிலையில், 'வடதிசைப் போரில் வெற்றி .ெ க | ள் ளாது , என்வாள் வறிதே மீளுமாயின், என்நாடு, பகைவர் வரவால் பாழுற்றுப் போவதற்கு மாறாகக், குடி கெடுக்கும் .ெ கா டு ங் கே ல் ஆட்சியால் பாழுற்றது எனப் பழிஉரை எழுதற்கு ஏதுவாம், கொடுங் கோல் செலுத்திய நெடும்பழியுடையேளுகுக' என்று வழங்கிய வஞ்சின உரையாலும், நல்லாட்சி நயக்கும் அவன் உள்ளம் தெள்ளெனப் புலப்படுதல் உணர்க.

கோல்முறை நெறிகண்ட குட்டுவன், கண்ணுதற் கடவுளின் வண்ணச் சேவடியைத் தன் பொன்முடிமீதும்,

10