பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடத்தைத், தன் அணிமணித் தோள் மீதும் கொள்ளும் கடவுள் வழிபாடு உடையவனாகவும், கற்புடைத் தெய்வமல்லது பொற்புடைத் தெய்வம் பிறிது இல்லை என்னும் உள்ளுணர்வு உடைமையால், கண்ணகி தேவியார்க்குக் கோயிலும் சிலையும் அமைத்து, தன் அருஞ்சிறையில் அடைபட்டிருந்த ஆரிய அரசர் முதலாம் பகையரசர் பலரையும் சிறைவீடு செய்தும், குடகக் கொங்கரும், மாளுவ வேந்தனும், கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் போலும் நட்பரசர்களே அழைத்தும், விழாக் கொண்டாடித், தமிழகத்தில் புதிய வழிபாட்டு நெறியைப் புகுத்திப் பெருமை கொண்டான்.

கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனரைத், தன் அரசவையில் பெரும் புலவராய்க் கொண்டமையால், சிலம்பு, மேகலை போலும் இருபெரும்காப்பிய நூல்கள் தோன்றத், தோன்ருத் துணைபுரிந்த செங்குட்டுவன், பெரும் புலவர் பரணர்பாலும் பேரன்பு உடையணுகி, தனக்குப்பின் சேரநாடு ஆளும் உரிமை வாய்ந்த தன்மகன் குட்டுவன் சேரலைக், கல்வி கேள்விகளில் வல்ல நல்லவனாக்கும், பெரும் பொறுப்போடு, வேழம் மலிந்தது மலைநாடு என்ற, தன் நாட்டின் பெருமைக்குத் துணைநிற்பதாய், வேழங்கள் மலிந்து விழுநிதி பயப்பதாய, உம்பற்காட்டு நாட்டின் வருவாயையும் வழங்கி, ஐந்தாம் பத்து எனும் தலைப்பின் கீழ்வரும், பாக்கள் பத்தினையும் பெற்றுப், பதிற்றுப் பத்து எனும் பெருநூல் உருவாக, வழி வகுத்து வான்புகழ் பெற்ருன்.

11