பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற் பண்பு

பதிற்றுப்பத்துப் பாடல் தொகுப்பில், பரணர் பாடிய ஐந்தாம் பத்துப் பாக்களில் ஒரு பாட்டின் ஒரு சிறுவரி; அதிலும் அ ப் பா ட் டி ன் ஈற்றுவரி, தமிழக வரலாற்று ஆசிரியர்கள் பலரும், தமிழகத்திற்குச் சூட்டியிருந்த பெரும்பழி ஒன்றை அறவே துடைத்தெறிந்து விட்டுப், புகழ் சூட்டிய பெருமையைத் தட்டிப் பறித்துக் கொண்டுளது.

இளந்திரையன் புகழ்பாடும் பெரும்பாணுற்றுப்படை என்ற சங்க காலப் பாட்டின் ஆசிரியர், கடியலூர் உருத்திரன் கண்ணனர், அவன் தலைநகர்க்குச் சூட்டிய பெயர் காஞ்சி, அல்லது காஞ்சீபுரம் எ ன் ப த ன் று ; மாருகக், 'கச்சி' என்பதே என வாதிட்டு, தம் கூற்றிற்குச் சான்ருகக், கச்சி யோனே கைவண் தோன்றல்’ (420) என்ற, அவர் பாடல் வரியைக் காட்டிவிட்டு, காஞ்சீபுரத்திற்குக், காஞ்சீபுரம் என்ற பெயரைச் சூட்டியவர், சங்க காலத்துக்குப் பலநூறு ஆண்டு களுக்கு முன்னரே வந்து, அக்காஞ்சியில் குடியேறிய, வடமொழியாளர்கள் தாம், என, வரலாற்றுப் பேராசிரியர்களெல்லாம் ஒருசேரக் கூறிவந்தனர்.

அவர்கள் கூற்று உ ண் ைம க்கு மாருனது, சங்க இலக்கியங்களை மேலோட்டமாகக் கூடப் படிக்கத் தவறி. யதால் நேர்ந்த பிழை என்பதை, உ ண ர் த் தி விட்டது அச்சிறுவரி.

சேரர் குலத்தவர்க்கு உரியதாய, அவர் நாட்டுக் கிழக்கு எல்லையாம் மலையில் தோன்றி, அச்சேரர்க்கு உரிய மேலைக் கடலில் சென்று சேர்வதும், ஆண்டுதோறும் சேரநாட்டு

12