பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மண்கெழுஞாலம்

பல போர்களிலும் செல்வக் கடுங்கோ வாழியாதனுடன் சென்று அவன் போர்ச்சிறப்பையும் படைச் சிறப்பையும் நன்கு உணர்ந்தவர் கபிலர். மடியாத ஊக்கத்தொடு பகைவரைத் தன்னொடு சேர்த்த சிறப்பின்ையுடையவன் அவன். அவனுடைய வெற்றிக்கெல்லாம் காரணமாய் விளங்கும் நாற்பெரும் படையின் சிறப்பினைப் பார்ாட்டு கிறார் புலவர். - , , .

போருக்குப்புறப்பட்டுச் செல்கின்ற அவன் தானையின் கடல் போன்ற முழக்கத்தையும் பெருத்த ஆரவாரத்தையும் கண்டு வியக்கிறார் புலவர். அவனுடைய களிற்றுப்படை அளவற்ற வலிமை உடையது. மலைபோன்று உயர்ந்து யானைகள். யானைகள் மேல் எடுத்த வெற்றிக்கொடிகள் வான் அளாவ உயர்ந்து நிற்கின்றன. பானைகள் அசையும் போது அந்தக் கொடிகள் அசைவது மலை மேலிருந்து விழும் அருவு காற்றால் அசைவது போன்றுள்ளது. கடல் போன்ற தானையின் இடை இடையே முரசுகள் ஒலிக் கின்றன. . -

காற்றால் மோதப்பட்ட கடலின் முழக்கம் போல கேட்பவர்களுக்கு அச்சத்தை எழுப்புகின்றன, அம்முரசு களின் முழக்கங்கள். பல போர்களிலும் அறம் பிழையாது வென்று மேம்பட்ட ரையே வீரராக ஆராய்ந்து தெரிந் தெடுத்துள்ளான் அரசன். பகைவரை பலமுறை எதிர்