பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 புலவர் கா. கோவிந்தனார்

கொண்டு எறிதலால் சிதைந்த வெற்றி பொருந்திய வீர வாளினை ஏந்தியுள்ளனர் வாள் வீரர்கள். இலை போன்ற வடிவமுடைய கூர்மையான வேலினை ஏந்திய வீரர்கள் அப்படையில் நிறைந்துள்ளனர். போர்ப் பயிற்சியில் சிறந்து பகைவர் மீது பாய்ந்து வன்மை குறைந்த குதிரைப் படை யும் அவனுடைய தானையில் உண்டு. இத்தகைய வலிமை வாய்ந்த தானையுடன் சென்று எதிர்த்த பகைவரைத் தாக்கி வெற்றி பெறும் திறமுடையவன். போரிலே பட்டு வீழும் பின்னங்கள் பெருகி மலைபோல் குவிகின்றன. இதனால் பகைவர் நாடு குடிவளம் குன்றிக் கெடுகிறது. தீது கடிந்து நன்று புரக்கும் வேந்தற்கு கெட்ட் குடியை நலமுறு வித்துப் பேணுதல் 'கடன். அக்கடமையைச் சிறப்பாகச் செய்தவன் அவன். .

போர் வென்றியில் மட்டுமல்ல; ஆட்சி நலத்திலும் அவனுடைய சிறப்பினைக் கண்டு மகிழ்கிறார் புலவர்.

கோன்நிலை திரியின் கோள்கிலை திரியும் கோள்கிலை திரியின் மாரி வறங் கூரும்' . "இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் காட்ட

பெயலும் விளையுளும் தொக்கு"

என்பர் ஆன்றோர்.

ஆட்சி நலம் இல்வழி மழையின்மைக்குக் காரணமாகிய நாளும் கோளும் நிலை திரிதலின் விசும்பும் இடம் சுருங்கித் .*- தடுமாறும் என்பதை உணர்ந்தவர். அவன் முன்னோர். அவர்கள் தெளிவான மாறாத கொள்கையுடையவர்கள். ஆதலால் இவ்வணுச் செறிந்த நிலவுலகத்தை இனிது ஆண்டார்கள், நான்கு திசைகளிலும் தங்சுள் அரசாணை யாம் திகிரியைச் சுழல விட்டு மேன்மையுடன் ஆண்டார்கள். அவர்கள் ஆட்சியில் மாதம்.மும்மர்ரி பொழிந்து நீர்வளம்