பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பறைக்குரல் அருவி

செல்வக் கடுங்கோ வாழியாதனோடு தொடர்பு கொண்ட கபிலர், பாரியோடு நட்பு கொண்டிருந்த காலத்தில், அப்ப்ாரி ஆன்றோர் உரைக்கு அடிபணிந்து அரசல்வக்கண் இருந்தபோதும், முடியுடை மூவேந்தர்களின் முற்றுகைக்கு மண்டியிட்டுப் போகாது மார்புயர்த்தி நின்ற போதும், தன் வாயிற்கண் வந்து நிற்பார்க்கெல்லாம் வாரி வாரி வழங்கும் போதும், மாண்புடைய மனைவியோடும் மக்களோடும் இல்லறமாம் நல்லறத்தை இனிதே நடத்தும் போதும், எவ்வாறு அவன் நிழல் போல் இருந்து, அவனை முழுமையாக உணர்ந்து கொண்டாரோ, அத்ேபோல் செல்வக் கடுங்கோவின் வாழ்க்கையோடும் இரண்டறக் கலந்து நின்று இவனையும் முழுமையாக உணர்ந்து கொண்டார். -

ஒரு பாட்டில், அவன் வெற்றிச் சிறப்பையும், ஒரு பாட்டில் அவன் கொடை வளத்தையும், ஒரு பாட்டில் அவன் பண்பு நலத்தையும், ஒரு பாட்டில் அவன் மனைமாட்சி யையும் பாடற் பொருள்களாகக் கொண்டு பாக்கள் பல பாடியும், கபிலர்க்கு மனநிறைவு ஏற்படாதாகவே அவன். பெருமை அளைத்தையும் ஒரே பாட்டில் ஒரு சேர வைத்துப் பாராட்டத் துடித்தது அவர் உள்ளம். - * , ;

நன்கு பயிற்சி பெற்ற நாற்படைகளைப் பெற்றிருப்பது மட்டுமே, ஒரு பேரரசனுக்குப்போதுமானதாகாது. அந்நாற்.