பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 1 || ||

படைகளை நெறி அறிந்து செலுத்தும் அறிவுத்திறனும், அவ்வறிவுத் திறன் கொண்டு போர் உடற்றுங்கால் உருக் குலைந்து போகா உடல் திறனும் வாய்க்கப் பெற்றிருத்தல் வேண்டும். செல்வக் கடுங்கே பால் அவை பொருந்தி :யிருந்தன.

சேரநாட்டு நாற்படையுள், வேழப் படையே பெரிது: வேழம் உடைத்து மலைநாடு’, என்ற பாராட்டு அதற்கு உண்டாயது அதனால்தான். தன் வீரர், வீறுநடை போட்டுச் செல்லும் வேழங்கள் மீது அமர்ந்து செல்லும் கண் கொள்ளாக் காட்சியிலேய்ே மனநிறைவு கொண்டு விடுபவன் அல்லன். போர்க்களிற்றின் மீதமர்ந்து அதன் பிடரிக்கண் பிண்த்திருக்கும் கயிற்றினிடையே தன் காலைச் செருகிக் கொண்டு போர்க்கள நிலைக்கு ஏற்ப, இயங்க வேண்டிய நிலைகளைத் தன் முன்காலால் அக்கயிற்றினை இயக்குவதன் மூலம் உணர்த்தி, அக் களிற்றினை நடத்திச் செல்லவும் வல்லன். அக்கர்ட்சியைக் கண்டுகளித்தவர் கபிலர். -

அதுபோலவே, குதிரைமீது அமர்ந்து களம்புகும் நிலையில், தன் கால் முனையால் போர்க் குதிரையின் உடல்ைத் தழுவலும், தீண்டலும் செய்வதன் மூலம், அப் போர்க் குதிரையைப் பல்வேறு கதிகளில் காற்றெனச் சுழன் றோட்டக் கற்றவன் கடுங்கோ. அது செய்து செய்து அவன் கால் முனை தழும்பேறிக் கிடப்பதைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தவர் கபிலர். - • ' ' ' .

பகைவர் படை அழிவிற்குத் தன் படைவீரர் ஏந்தி நிற்கும் வேல்களையும், வாள்களையும் மட்டுமே நம்பி இருப்பவன் அல்லன் கடுங்கோ. பட்ைவீரர் ல்ேல், வாள் களினும் தன் கை வேலையும, வாளையுமே பெரிதும் பயன் படுத்துவன். பகைவர் தந்த பல போர்க் களங்களில் வெற்றிக்கு அவன் கை வேலும், வாளுமே துணை புரிந்ததைப் பலமுறை நேரில் கண்ணுற்று நெஞ்சு நெகிழ்ந்தவர் கபில்ர்.