பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 புவவர் கா. கோவித்தனார்

கனிறு ஊர்ந்து செல்வதிலும், குதிரை ஓட்டம் புரிவதிலும் வாட்படை, வேற்படைகளை வீசுவதிலும் ஒருவன் வல்லவன் ஆக வேண்டின் அவன் தோளாற்றல் வாய்ந்தவனாதல் வேண்டும். ஒரு நாற்படையை நடத்திச் செல்லும் ஒரு தானைத் தலைவன், உடல் உரம் வாயா ஒல்லியோன் ஆதல் கூடாது. அந்நாற் படை கண்டு நடுங்கும் உரம் வாய்ந்த திண்ணிய உடல் உடையோன் ஆதல் வேண்டும். செல்வ்க் கடுங்கோவின் உடல், கல்லோடு மோதினும் கலங்கா நல்லுடலாதல் கண்டு நயந்தார் கபிலர்.

தேன் நிறைந்த மலர்களை நாடிச் செல்லும் வண்டுகள் தேனற்ற மலர்கள் பக்கம் செல்வது கிடையாது. தேனின்மை, யின் வண்டினம் மொய்த்துப் பாடும் சிறப்பினை இழந்த கூர்மையான ஊசி போன்ற பனந்தோட்டோடு தேன் மொய்க்கும் தண்ணிய சுனைகளில் மலர்ந்த குவளை மலர் களையும் இடையே வைத்துத் தொடுத்த கண்ணியைச் சூடிய வர்கள் போருடற்றுத்லும் அதன் கண் வெற்றி பெறுதலும் தமக்கு நிலையாகக் கொண்டு சிறக்கும் வெற்றி வேந்தர்' களுடனே அவன் போர் புரிந்தான். இத்தகைய ஆற்றல் பொருந்திய வேந்தர்களுடன் நாடோறும் செய்துவரும் நல்ல போரில் மிக்க சினத்தையுடைய பகை அரசர்து தலைமையை அழித்து வெற்றி உண்டாவதற்குக் காரணமான வெற்றிக் கழலை அணிந்த வீரர்களுக்குத் தலைவனாக் இருக்கும் பெருமையுண்டயவன் அவன். - .

செல்வக் கடுங்கோ வாழியாதலின் வெற்றிச் சிறப்பையும் வீரத்தையும் கண்டு போற்றிய புலவர் அவனிடத்து நிலை பெற்ற நறகுணங்களை உணர்ந்து வியந்து பாராட்டுகிறார். பொய்யாமை அறம் பலவற்றுள்ளும் சிறந்தமையுணர்ந்து அதனை விளையாட்டிலும் நெகிழாது ஒம்பும் நற்பண்பினை வியக்கிறார். விளையாட்டாகக் கூறும் பொய் யார்க்கும் என்றும் எத்துணையும் தீமை பயவாயினும் கொள்ளந் பால தன்று என உணர்ந்து தள்ளியொழுகும் வாய்மை யுடைய