பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 113

வன் அவன். பகைவர் எஞ்ஞான்றும் புறத்தே குற்றங்கூறி இகழ்வது இயல்பாதலின் அதனைக் கேட்டு மனவமைதி குறைவதிலும், கேளாது அவரை வேறோடு தொலைத்தற் குரிய காலமும் கருவியும் இடமும் நோக்கியிருத்தல் அறிவு-ை வேந்தற்கு ஆண்மையும் புகழும் பயக்கும் என்பதை உணர்ந் தவன்."

தற்பண்புகளுக்கு நிலைக்களனாக வாழ்ந்த செல்வக் கடுங்கோவின் அரசமாதேவியும் பெண்மைக் குணங்களில் சிறந்து விளங்குபவள் என்பதை அறிந்து அவள் குணங்களை யும் போற்றுகின்றார். பெண்மை, பெண்கட்குரிய அமைதித் தன்மை ஆயினும், ஈண்டுச் சிறப்புடைய நாணத்தின்மேல் நின்றது. நாணமே உருவாய்க் கொண்டு விளங்கும் நுட் பத்தை பெண்மை சான்று” என்றார். தான் தன் வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்ட காதலற்கு நலந்தரு வனவன்றிப் பிறவற்றின்பால் மடம் பட நிற்றல் பற்றி மடம் எனப்படுவதாயிற்று. தன் ம்ென்மைத் தன்மையைப் பெற். றோராலும் சான்றோராலும் நூன்முகத்தாலும் இயற்கை அறிவாலும் அறிந்து எக்காலத்தும் தன்னைப் பாதுகாத் தொழுகும் அறிவுடமையாம் கற்புநெறியில் சிறந்தவள். நினைவு. சொல், செடில் என்ற மூன்றும் கற்பு நிற்கும் சீர்மையுடையவள். உயிர்க்கிறுதி வந்தவிடத்தும் அறத்தில் திரியாக் கோட்பாட்டை உடையராய் வேந்தற்கு மெய்ந் நிழல் போலப் பின் சென்று உறுதியாவன ஆற்றும் உள்ள முட்ையராகிய சுற்றத்தார். நீங்காது அவனைச் சூழ்ந்திருக் கும் சிறப்புடையவன்.' போர்க்களத்தே பகைவரை வென்றிச், சிறப்பெய்தும் வெல். போரண்ணாதலின் வெற்றி யெய்துத் தோறும் களவேள்வி செய்து கடவுளரை மகிழ்விக்கின்றான்.

அறப்போர் புரிந்து உயிர் துறந்து வீரருறையும் துறக்கம் புகுந்தவரை "உயர்நிலை யுலகத்தையர் என்பர் அவருடைய ஒழுகலாற்றையும் போர்த் திறனையும் புலவர் பாட, பாணர் இசைக்க, கூத்தர் கூத்தியற்றக் கண்டும்

புலா-8