பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

lić - புலவர் கா கோவிந்தனார்

கேட்கும் சிறப்பித்தலால் அவர் மகிழுமாறு செய்கிறான். தாம் பிறந்த குடியின் நலத்தைப் பேணும் நண்பமைந்த சான்றோர்க்கு அடங்கியொழுகும் நல்லாற்றினை உடைய வன். இளமையிலே மானத்தின் நீங்கா ஆண்மை நற்குடிப் பிறந்தோர்க்குக் கருவிலே வாய்த்த திருவாகும் வணங் காமைக் கேதுவாகிய வணங்கா ஆண்மையுடையவன் இளந்துணையாகிய மக்களைக் கொண்டு முதியர் பேணும்

நல்லறத்தை ஆற்றினான். х .

முதியோர் முதுமையெய்துமுன் நாடு காத்தற்கு அறிவு வேண் டிய வழி அறிவு உதவியும் வாள் வேண்டுழி வாளுதவியும் துணைபுரிந்தோர் அவரை முதுமைக்கண் பேணுதல் நன்றி அறிதலாகிய பேரறம். இவ்வறத்தைத் தவறாது செய்பவன். - -

மேற்கு மலைத் தொடரிலுள்ள ஒரு மலை அயிரை

மலை. அம்மலையிலிருந்தும் இறங்கும் அருவி இழுமெனும் ஓசையும் பறை போன்ற முழக்குமுடையது. கற்பக முதலிய செல்வத்தையுடைய தேவர் வாழும் உலகமும் கேட்கும்படி அவ்வருவிகள் அங்கே இறங்குகின்றன. உயர்ந்த சிகரங்கள் பல நிறைந்தது அம்மலை. அருவி துவன்றும் அயிரை நெடு வரை தொலையாது நிலை பெறுவது போல சேரமான் வாழும் நாட்களும் அழிவில்லாததாக இருக்கட்டும் என்று அவனை வாழ்த்துகிறார். ; : . . . . . . . . . . - -

பறை போன்ற முழக்கமுடைய அருவிகள் இறங்கும் நெடிய அயிரை மலைபோலநிலை பெற்று வாழ்க என்று வாழ்த்தியமையால் இது பறைக்குரல் அருவியாயிற்று. .

  • களிறு கடைஇய தாள் மாவுடற்றிய வடிம்பு சமந்ததைந்த வேல் கல்லலைத்த தோள்