பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 புலவர் கா. கோவிந்தனார்

மண் முழக்குவது இல்லாமையால், ஈரம் புலர்ந்து போக, அவன் பால் பரிசில் பெற்று வாழ்ந்த இரவலர் அனைவரும், எண்ணி எண்ணி நெஞ்சு நெகிழ்ந்து வருந்தவும், மீண்டும் வாரா உலகமாம் வானாடு அடைந்து விட்டான். ஆகவே, "புரப்ட்வர் யாரும் இல்லை. புரப்பாயாக' என வேண்டி உன்பால் இரந்து லந்தவன் அல்லன் நான்.

'கொடுக்கிலாதானைப் பாரி” என்றும், மிடுக்கிலா தானை வீமன்’ என்றும் இல்லாதன கூறிப் பாராட்ட அறியாதவன் நான். கொற்றம் மிக்கவனும், கொடை வள்ளலுமாகிய பாரியை இழந்து வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா என வாழ்க்கை வெறுத்துக் கிடந்த எனக்கும் பாரிபோல், கொற்றம் உடையவனும் கொடைவளம் உடையவனும் ஒருவன் உளன்?. அவனே செல்வக் கடுங்கோ என, நண்பர் பல கூறப் பாரிக்குப் பின் ஒருவன்; அவனுக்கு நிகரானவன் ஒருவன் உளன் என்றால், அவனை இன்றே கான வேண்டும் என்ற ஆசை துரத்தவே இவண் வந்தேன். ஆங்கு, அவ்வான்றோர், உன் கொடைப் பெருமைக் கூறக் கேட்டேன். ஈங்கு வந்து உன் நாளோலக்க நலங்கண்டு உன் கொற்றத்தின் வெற்றியை விளங்கக்கண்டேன். -

இது, மிகைப் படக் கூறல் அன்று. கேட்டும் கண்டும் உளமார உணர்ந்த உண்மைகளையே உரைக்கின்றேன்.” எனக் கூறிச் சினக்கும் முகத்தான். பாரியை இழந்து விட்ட தமிழ் நாட்டில் அவனிடத்தில் வைத்துப் பாராட்டத் தக்க பெரியோன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற உண்மை:ைபக் க. கூறி, அவன் அருள், ஆற்றல் நலங்களை விளக்கும் அழகி. பr ஒன்று முகிழ்த்தது. அது இதோ. -

பலா அம் பழுத்த பசும்புண் அரியல் வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல்; ஒவத்து அன்ன வினைபுனை கல் இல்; பாவை அன்ன நல்லே :ள் கணவன்;

ցյrւն հ