பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம பாசறை 27.

பொன்னின் அன்ன பூவின், சிறி இலைப் புன்கால் உன்னத்துப் பகைவன்; எங்கோ புலர்ந்த சாந்தின், புலரா ஈகை மலர்ந்த மார்பின், மாவண் பாரி முழவு மண்புலர, இரவலர் இணைய வாராட் சேட்புலம் படர்ந்தோன் அளிக்கு: இரக்கு வாரேன்: எஞ்சிக் கூறேன்,

ஈத்தது இரங்கான்: ஈத்தொறும் மகிழான். ஈத்தொறும் மாவள்ளியின் என நுவலும் கின் கல்லிசை தர வக்திசினே; ஒள்வாள் உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை நிலவின் அன்ன வெள்வேல் பாடினி முழவிற். போக்கிய வெண்கை விழவின் அன்ன கின்கலி மகிழவனே, .

பதிற்று : 61

துறை காட்சி வாழ்த்து வண்ணம் . ஒழுகு வண்ணம் துTக்கு = செந்துக்கு

பெயர் - புலா அம்பாசறை

புலால் நாறும் பாசறை எனும் பொருள் தருவதாய "புலா அம் பாசறை” என்ற தொடர், பாசறையை பழிப்பது போல் தோன்றினும், பாசறைக்கு உரியோனின் வாட்படை வேழப் படைகள், பகைவர் உடலங்களைக் குத்திக் கிழித்த வழிச் சிக்குண்ட பகைவர் குடர்களைக் கொண்டிருப்ப தி னாலேயே, பாசறை புலால் நாறுகிறது என்பதால் பாசறைக்கு உரியோனின் படைப்பெருமையினை உணர்த்தும் இனிய இலக்கிய நயம்பயக்கும் தொடராதல் கண்டு வியந்து பாராட்டிய யாரோ ஒரு பெரியார் இப்பாட்டிற்குப் "புலா அம் பாசறை” என்ற அத்தொடரையே பெயராகச் சூட்டிச் சிறப்பித்துள்ளார். - .