பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அருவி ஆம்பல்

பாரி மறைவிற்கும், அவன் மகளிரைப் பார்ப்பார பால் ஒப்படைத்து வடக்கிருந்து உயிர் துறப்பதற்கும் இடைப்பட்ட காலத்தைக், கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதனோடு கழித்தார். அப்போது, கடுங்கோ பால் குடிகொண்டிருந்த அரிய பண்பு நலங்களையெல்லாம் உணர்ந்து கொண்டார். . - . . . . .

“பணியுமாம் என்றும் பெருமை: "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் "பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி "குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு'. 'பெருக்கத்து வேண்டும் பணிதல்' எனப் பணிவுடைமையின் சிறப்பு, அடுக்கடுக்காகக் கூறப்பட் டிருந்தாலும், தன்னால் பணியத்தக்க பெருமை வாய்ந்த ஆன்றோர், சான்றோர். அறவோர் அல்லாத, பகைவர் போலும் பண்பிலார் முன்பணிதல், பேரரசர்க்கு அழகாகாது

பாண்டியன் பல்யா சாலை முது குடுமிப் பெருவழு திக்கு அறிவுரை வழங்கும் புலவர் காரிகிழார், வேந்தே!. உன் வெண் கொற்றக்குடை, முனிவர்களாலும். போற்றி வணங்கப் படும் முக்கண் செல்வனாம் சிவன் இடங் ; கொண்டிருக்கும் கோயிலை வலம் வரும் போது மட்டுமே தாழ்வதாக! உன் தலை, நான்மறை அறிந்த அந்தணிப் பெரியோர்கள் உன்னை வாழ்த்தி உயர்த்தும் அவர். கைகட்கு மட்டுமே வணங்குமாக’, ("பணியியர் அத்தை