பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - புலவர் கா. கோவிந்தனார்

நின்குடையே, முனிவர் முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே! இறைஞ்சுக, பெரும! நின் சென்னி, சிறந்த

நான் மறை முனிவர் ஏந்துகை எதிரே" (புறம் : 6)-என

இறைவனுக்கும். இறைவழிபாடாற்றும் அறவோர்க்கும் மட்டுமே பணிக எனக் கூறவது காண்க. -

செல்வக் கடுங்கோ, இச் செந்நெறி உணர்ந்தவன். அதனால், நான் மறை உணர்ந்து, ஒதல் முதலாம் அறுவகை ஒழுக்கம் மேற் கொள்ளும் பார்ப்பனரைக் கண்ட அளவே பணிந்து விடுவான் அவர் அல்லாத பிற எவராயினும் அவர் முன் பணிந்து போதலை அறியாதவன் அவன்.

ஒருவர்க்கு, வணங்காத் தலை மட்டும் இருந்தால் போதாது. ஒடுங்கா உள்ளமும் வேண்டும். உள்ளத்து அணையது உயர்வு என்பர் திருவள்ளுவர் உள்ளுவ எல்லாம் உயர்வுடையனவாகவே இருத்தல் வேண்டும் இத்துணை 'உயர்வுடைய ஒன்றை அடைதல் நம்மால் இயலுமா என ஏங்கி, ஒடுங்கிய உள்ளம் உடையராகி விடுதல் கூட்ாது.

ஒடுங்கா உள்ளம் உடைமையே ஒருவரின் ஆண்மைக்கு அழகு தர வல்லதாம். அத் தகு ஒடுங்கா உள்ளம் பெற்று உயர்ந்தவன் கடுங்கோ, செல்வக் கடுங்கோவின் இச் சிறப்பின்ைக் கபிலர், "ஒடுங்கா உள்ளத்து, ஒம்பா ஈகை கடந்தடு தானைச் சேரலாதன்' (புறம் :8) எனப் புறத்திலும் பாராட்டியுள்ளார். -

'அச்சம் உடையார்க்கு அரண் இல்லை;' 'அச்சமே கீழ் மக்களது ஆசாரம்' எனஅச்சம் உடைமையைக் கண்டிப்பதும் 'அஞ்சாமை அல்வால் துணை வேண்டா; 'அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கின் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு என அஞ்சாமையை வரவேற்பதும் உலகியல்பு. என்றாலும், சிற்சில இடங்களில் அச்சங் கொள்வது வரவேற்கத் தக்கதாகவும், அஞ்சாமை வெறுத்துக் கைவிடத் தக்கதாகவும் அமைந்து விடுதலும் உண்டு.