பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 45

திருவள்ளுவர், அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்': விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு'; "தீயவை தீயபயத்தால், தீயவை தீயினும் அஞ்சப் படும்' என அஞ்சுவதை வரவேற்பதும், 'அஞ்சுவது அஞ்சாமை பேதமை” தீவினையார் அஞ்சார் திவினை என்னும் செருக்கு” என அஞ்சாமையைக் கண்டிப்பதும் காண்க செல்வக்கடுங்கோ பால் அஞ்சாமையேவிஞ்சி நிற்குமாயினும், நண்பர்கள் பால் கொண்ட கண்ணோட்ட மிகு ಥಿLTಳು! ஒரோவழி அவர்க்கு அஞ்சுவதும் செய்வன்.

ஒரு மாவீரனின் மார்புக்கு அழகு தருவது, அணிந் திருக்கும் பன்னிற மலர்மாலையோ, பூசியிருக்கும் நறுமணச் சந்தனமோ அன்று. பகைவரால் அலைக் கழிக்கப் படாமை யும், அவன் உரிமை மகளிரால் அலைக் ياباني : க்கப் படுத லுமே, அம் மார்பிற்கு மாண்பாகும். மலைப்பரும் அகலம் மதியார் சிலைத் தெழுந்து (புறம் 78;) இளையோர்க்கு மலர்ந்த மார்பின்ை' (சிறுபாண்:232): 'மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்பர்: (புறம் :10); எனப் புலவர்கள் கூறுவது காண்க 4

பகைவர்க்கு அரிதாம் செல்வக் கடுங்கோவின் மார்பு அவன் உரிமை மகளிர்க்கு எளிதாம். பகைவர்க்கு இன்னான் ஆம் கடுங்கோ அவன் உரிமை மகளிர்க்கு இணியனாம். வளைந்து வானவில் போலும் பன்னிற மலர்கள்ால் ஆன மாலை கிடந்து அலைக்க, மனங் கம்மும் சாந்து பூசப்பெற்ற செல்வக் கடுங்கோவின்மார்பின் மீது பாய்ந்து அதை மலர்த்துவது என்பது, பகைவரால் நெஞ்சத்தாலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று. அத் துணைப்பேராற்றல் வாய்ந்தது. ஆனால், அம்மார்பு, அவன் உரிமை மகளிரைக் கண்டதுமே அவரை விரைந்து ஏற்றுக் கொள்ள விரிந்து மலர்ந்து விடும். . . . . . . . . . . . . . .