பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புலவர் கா, கோவிந்தனார்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்'

'பொய்யாமை அன்ன புகழில்லை'. "எல்லா விளக்கும் விளக்கு அல்ல; சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு' எனப் பொய்யாமையின் பண்பு பாராட்டுவர் திருவள்ளுவர். சொன்ன சொல்லை, கொடுத்த வாக்குறுதி யைக் காப்பது, இயல்பான நிலையில் எவர்க்கும் எளிது. ஆனால், ஒருவர் பேரிடர்க்கு உள்ளாகி, சொன்னபடி நடந்து. காட்டினால், வாழ்வே நிலை குலைந்து இல்லாகிப் போய் விடும் என்ற நிலைக்கு உள்ளாகி விட்ட போதும், சொன்ன சொல்லைக், கொடுத்தவாக்குறுதியை, மறவாது செயலாற்றல் என்பது செயற்கரிய செயலாம். 'நிலம் புடை பெயர்வராயினும், கூறிய சொல் புடை பெயர்தலோ இலரே” (நற்றிணை-289) என அப்பண்பு நலனைப், புலவர், பாராட்டவும் செய்வர். .

சொன்ன சொல்லை, ஒருவர்க்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பதாயின் நானிலம், தன் இயல்பு கெட்டு, நிலை குலைந்து போகும் என்றாலும், சொன்ன சொல்லை, கொடுத்த வாக்குறுதியைப் பொய்த்துப் போக விடாது காக்கும் உள் உரம் வாய்ந்தவன் செல்வக் கடுங்கோ.

பணிந்து திறை தருவார் நாடு பல்வளமும் பெற்று அமைதி வாழ்வு வாழப் பார்த்திருக்கும் செல்வக் கடுங்கோ, "கடல் ப்ோலும் அகழி, மலை போலும் மதில்களைக் கொண்ட அரண் உட்ையேம் அளக்கலாகாக் செல்வம் உடையேம்" எனச் செருக்கி நிற்பாரை வாழ விடான். அழிக்கலாகாதது என அவர் கருதியிருக்கும் அவர் அரணை அழித்து, அவர் செருக்கிற்குக் காரணமாய் ஆங்குக் குவித்து வைத்திருக்கும் செல்வக் குவியலைத் தனதாக்கிக் கொள்ளத் துணிந்து விடுவன். - -