பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 47

ஒருமுறை சேர நாட்டு எல்லைக்கண் உள்ள வேற்று மொழி பேசும் கொற்றவர் இருவர், அரண் உடைமையாலும் அளவிலாப் பொருள் உடைமையாலும். அவனைப் பணிய மறுத்து, எதிர்த்து நின்றனர். அவ்வளவுதான், மலையை யும் மண்ணாக்கும் கொடிய இடியேறு போலக் கடுஞ்சினம் கொண்டான். அரண் அழிக்கப் போவார் வழக்கமாகச் சூடும் உழிஞைப் பூ மாலை அணிந்து புறப்பட்டு விட்டான். தமிழர் பெரும்படை பின் தொடர்ந்து விட்டது. வாட்போர் வல்ல அப்பட்ைக்குத் தானே தலைமை தாங்கிச் சென்ற செல்வக் கடுங்கோ, ஒரே போரில், ஒரே களத்தில் அவ்விரு அரசர்களையும் வென்று துரத்தி விட்டு, அவர் அரனையும் இல்லையாக்கி, ஆங்குக் கொட்டிக் கிடந்த அவ்ர்தம் பொருட் குவியலைக் கைக் கொண்டு திரும்பினான். அவன் மேற்கொள்ளும் போர் அனைத்தும், இவ்வாறு வெற்றி தரும் போராகவே அமைந்து விட்டன. . - - - -

செல்வக் கடுங்கோ, இவ்வாறு செல்லும் இடமெங்கும் வெற்றிகளே பெற்று வீறுமிகு கொற்றவனாய் விளங்குவது கண்ட அவன் பகைவர் படையைச் சேர்ந்த வீர்ரெல்லாம், ஆற்றல் மிகு மறவர், அழிக்கலாகா ஆண்மையாளர், அமர் மேம்படும் அருஞ்சமர் வல்லார் என்ற தம் பழம் பெரும்ை யெல்லாம் பாழ்பட்டு அழிந்து போகத் தம்மை வென்று அழிக்கும் விறல் படைத்த வாழியாதனோடு மேலும் பகை கொண்டிருப்பது போர்த்திறம் ஆகாது என அறிந்து, அந்நிலையே அவனை அடைந்து, அவன் தாள் பணிந்து, வேந்தே! வாழ்க நின் கொற்றம்! இன்று முதல் பாம் நின் ஏவ்ல் கேட்கும் தின் இளையர் ஆயினேம், நின் சிந்தை வழிச் செயல்படும் செயல் வீரராயினேம். எம்மை ஏற்று அருள் புரிவாயாக!” என அவன் சார்புடையவராக மாறி நின்றனர். - - - - -

படைவீரர் பணிந்து வந்தாராக, செல்வக் கடுங்கோவும் - அவ்வீரர்கள். தன்னோடு போரிட்டது தங்கள் விருப்பத்தால்