பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 புலவர் கா. கோவிந்தனார்

அன்று; பகை வுேந்தர் ஏவலால், ஆகவே பிழை அவருடைய தன்று. ஆகவே, ஏற்று அருள் புரியத் தக்கவரே என்ற எண்ணம் உடையவனாகி, அவான்ன பலரையும், தன் பணி யாளராக ஏற்றுக் கொண்டான். இத்தகு போர்த் திறத் தால், அவனை வலிய வந்தடைந்த வெற்றிகள் மேலும் பலவாம். இவ்வாறு, தான் பிறந்த சேரர் குடியின் பீடும் பெருமையும் பாரெல்லாம் சென்று பரவ வழி வகுத்தன்மை யால், அவனைச் சேரர் குலம் விளங்க வந்த விழுமியோன்' என உலகம் பாராட்டலாயிற்று. .

சேரர் தலைநகரில் வாழ்ந்து, தாம் நேரில் கண்டறிந்த செல்வக் கடுங்கோவின் பெருமையினும், அந்நாட்டுச் சிறந்தார் வழிக் கேட்டறிந்த அவன் சிறப்பு, இவ்வாறு மிகப் பெரிதாதல் அறிந்து அளவிலா மகிழ்ச்சி கொண்டார் கபிலர். . . - - .

. இவ்வாறு, எல்லா வகையினும், நல்லோனா ய் வாழக் காணவே, அத்தகையான் இவ்வுலகில், நெடிது, வாழ வேண்டும் என விரும்பினார். உலகியல் அறங்கள் அழிவுற்றுப் போகாது நின்று வாழ்வது, இவன் போலும் நல்லர் சிலர் வாழ்வதினாலேயே என்று ஆன்றோர்கள் உரைத்துள்ளனர். "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்” என்கிறார் வள்ளுவர். ஆகவே, இவ்வுலகம் அழியாது வாழ வேண்டுமாயின், அத் தகு நல்லோரை, “இவ்வுலகத்துச் சான்றோர் செய்த நன்று உண்டாயின்...... கொண்டல் மாமழை பொழிந்த நுண் பல்துஜியினும் வாழிய பலவே (புறம் :34) எனப் புலவர் பெரும்க்கள் வாழ்த்துவது வழக்கம். - . . . -

நல்லோர்க்கும் நல்லோனாய் விளங்கும் வாழியாதனும் நெடிது வாழ வேண்டும். அதற்கு இவ்வுலகமும் நல்வினை உடிையதாதல் வேண்டும். அதற்கு அத்தகு ஆகூழ் உள தாயின், இவன் ஊழி பல வாழ வேண்டும். வெள்ளம் ன்ன்னும் பேரெண் அளவினதான ஊழி பலவும் வாழ