பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. காண் மகிழ் இருக்கை

ஒரு நாட்டிற்குப், பசியறியா வாழ்வளிக்கும் சோற்று வளம், வறுமையின் வாட்டம் காட்டா வாழ்வளிக்கும் பொன்வளம், அறியாமையின் இழிவு காணா வாழ்வளிக்கும் கல்வி வளம், பகைவர் பயம் காணா வாழ்வளிக்கும் படை வளம் ஆகிய நான்குமே இன்றியமையாதன எனினும், படைநலம் இல்லாத நாட்டில், ஏனைய முப்பெருநலங்கள் நிலைபேறுடைய்வாதல் இயலாது. இதை உணர்ந்தே, தமிழகத்தின் நால்வேறு நலங்களையும் பாராட்ட முன் வந்த புலவர் ஒருவர். "வேழம் உடைத்து மலைநாடு" எனத் தமிழகத்தின் படைப்பெருமையினை முதற்கண் வைத்துப் பாராட்டினார்.

நாடாள்வார் அனைவருமே அறிந்த -அறிந்திருக்க வேண்டிய உண்மை இது. அதனால், எந்நாட்டுக் காவலனும் நாற்படை அமைப்பில் கருத்துான்றியே இருப்பன். ஆகவே அச்செயல், அவனுக்குத் தனிச்சிறப்பளிக்கும். பெருமை யுடையதாகாது. அது அவன் கடமை ஆகவே, செல்வக் கடுங்கோ பாலும், அத்தகுபடை இருந்திருக்கும் என்றாலும் அரசர் அனைவர்க்கும் பொது இயல்பான அதை அவன் பெருமைக்கோர் உரைகல்லாசுக் கொள்வது பொருந்தாது. ஆனால் செல்வக்கடுங்கோவின் அச்செயல்ையும் கபிலர் பாராட்டியுள்ளார் என்றால், அவை அவன் கடமைகளுள்

ஒன்ற்ாகக் கொண்டு புறக்கணித்து விடல் இயலாது, ஏனைய அரசர்களின் படைகளுக்கு இல்லாத ஒரு தனிச்