பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை Ö9

சிறப்பினை, அப்படை பெற்றே இருக்க வேண்டும். யாது அத்தனிச்சிறப்பு?

ஒரு படையின் பெருமை, அப்பட்ையால் வெற்றிக் கொள்ளப்பட்ட பகைவர் நிலைக்கு ஏற்பவே அமையும். ஆகவே, செல்வக்கடுங்கோவின் படைப்பெருமையை, உணர்ந்து கொள்வதன் முன்னர், அப்படையால் வெற்றி கொள்ளப்பட்ட, அவன் பகைவர் நிலையினை உணர்ந்து கொள்வது இன்றியமையாதது. -

செல்வக் கடுங்கோவின் படைவீரர் வெற்றி கொண்ட பகைவர் எத்தகையவர்: நாகம் ஒன்று உயிர்ப்ப, 'ஒடி ஒளியும் எலிக்கூட்டம் போன்றவரா? அல்லர், ஆற்றல் மிக்க நாற்படை வாய்க்கப் பெற்றவர், அப்பகைவர். அவர்தம் நாற்படையுள் ஒன்றாகிய குதிரைப்படை, பகைநாடு நோக்கிப் புறப்பட்டு விட்ட நிலையில், நாட்டு எல்லையி லேயே தம்மைத் தடுத்து நிறுத்த, தம்மை ந்ோக்கிப் பாய்ந்தோடி வரும் பகைநாட்டுத் துர்சிப் படையை பாழ் செய்து, களத்தைப் பிணக்காடாக்கிவிட்டு, அப்பினக் .குவியல்களை மிதித்தும் துவைத்தும் விரைந்தோடிச் செல்வ. தால், குளம்பெல்லாம் குருதிக்கறை படியப் பெற்றுப் பெருமையுற்றவை. அத்தகு பெரும்போர் மேற்கொண்ட தனால், தளர்ந்து விடாது, காற்றென விரையும் உரம் வாய்ந்தவை. . . அம்மட்ட்ோ இயல்பாகவே, அத்தகு நலம் வாய்க்கப் பெற்ற அவை, படைக்குரியோன், தம்பெருமை அறிந்து விரிந்த தலையாட்டம் போலும் அணிகலன்களால், தம்மை ஒப்பனை செய்து பெருமைப் படுத்தியதும், மேலும் போர் வேட்கை மிக்குப் பாயும் போர்க்குணம் வாய்ந்தவை. அத்தகு ஆற்றல் மிகு நாற்படை உடையேம் என்ற செருக்கு மிகுதியினாலேயே வந்து தாக்கியவர் செல்வக் கடுங்கோவின் பகைவர். அத்தகு பகைவரின் ஆற்றலையும் அழித்த அடலேறுகளாவர் செல்வக் கடுங்கோவின் படைவீரர்.