பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 புலவர் கா. கோவிந்தனார்

செல்வக்கடுங்கோவின் நாற்படையில் இடம் கொண்ட வீரர், ஏனைய வேந்தர்கள் பால் பணிபுரியும் வீரர் போல்வரல்லர். மாறாக வீரரும் பாராட்டும் விழுமியோ ராவர், போர்க்களத்தில் புறங்காட்டி ஓடிவந்து வாழும் உயிர் வாழ்க்கை வேண்டுமா? களத்தில் உயிரிழந்து போக, இறவாது நிற்கும் வெற்றிப் புகழ் வேண்டுமா? என்ற இடர்மிகு நிலைக்கு உள்ளாகும் போது, உயிரிழந்து பெறும் புகழையே விரும்பும் உயர் உள்ளம் வாய்க்கப் பெற்ற உரவோராவர். "சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார் (குறள் 777)-என வள்ளுவரால் பாராட்டப் பெற்றவர் போர் என்றனமே பூரிக்கும் தோள் உடையவர். வந்து விட்டதே போர்: களத்தில் நம் உயிர் என்ன ஆகுமோ?” எனக் கலங்குவது விடுத்து, உயிரிழப்பிற்கு அஞ்சா நெஞ்சுரம் வாய்க்கப் பெற்றவர்: "உறின் உயிர் அஞ்சா மறவர்', (குறள் 778) என்ற, வள்ளுவர் படைத்த வீரர்க்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்பவர். தம்மை எதிர்த்து வருபவன், உயிர் கொல்லும் கூற்றுவன்: அக்கூற்றiனும் கடுஞ்சின்த்தோடு கொதித்தெழுந்து வருகிறான் என்ற போதும், எதிர்த்து நின்று போரிட அஞ்சாத் தறுகணாளர். 'சுற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் ஆற்றவர்.”

செல்வக் கடுங்கோவின் படைவீரர்க்கு, அப்பேராற்றல் எவ்வாறு வந்துற்றது? அது, அவர்களின் கருவிலே வாய்த்த திரு. செல்வக்கடுங்கோவின் படையில் வழிவழியாகப் பணி புரிந்து வந்த நொல்குடியில் வந்தவர் அப்படை வீரர். அதனால்தான், அறவே அழிந்து போகும் கெடுநிலை வந்துற்ற போதும், கேட்டிற்கு அஞ்சாது நின்று போரிடும் பேராண்மை அவர்பால் அமைந்திருந்தது. "உலை விடத்து ஊறு அஞ்சா வன்கண், தொலைவிடத்துத் தொல் படைக் கல்லால் அரிது” (குறள் 762) என்றார் வள்ளுவர். .

நேற்று இருந்தவர், இன்றைக்கும் இருப்பர் என எண்ணும் வதற்கு இல்லா இயல்புடையது உலக வாழ்க்க்ை.