பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 71

'நெருகல் உளன் ആഖ് മ്യ இல்லை என்னும்

பெருமை உடைத்து இவ் வுலகு'

(குறள் 336)

என வாழ்வின் நிலையாமையினையும், உலகில் எல்லாம் அழித்து போகும் நிலையிலும், அழியாது நிற்கும் நிலை ப்ேறுடையது, அன்பு, அருள், அறிவு, ஆண்மைகளின் அடிப் படையில் செயலாற்றிப் பெரும் புகழே- "ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல்” (குறள்-333)-எனப் புகழின் நிலை பேறுடைமையினையும் உணர்ந்து, அதற்குத் தக நடக்கும் உளப் பக்குவம் வாய்க்க பெற்றவர்களால் மட்டுமே, அத்தகு ப்ெருவீரராய் வாழ்ந்து காட்ட இயலும். செல்வக் கடுங்கோவின் படிைவீரர்; அத்தகு மனப்பக்குவம் பெற்ற வயவராவர். அத்தகு பெரு வீரர்களைத், தன் படைத் தளபதிகளாகப் பெற்றிருப்பது, செல்வக் கடுங்கோவிற்குப் பெருமை. செல்வக் கடுங்கோவின் அப்பெருமை கண்டு கபிலர் பாராட்டியதற்கு இதுவும் ஒரு காரணமாம். - - -

பெரும்பாலும் எல்லாப் போர்களும், தன் மண் காக்க வும், பிறர் மண் கொள்ளவும் என இவ்விரு காரணம் கருதியே நிகழும். அவ்விரு வகைப் போர்களுள், பிறர் மண் கொள்ள மேற்கொள்ளும் போர், மன்னனின் மண்ணாகை காரணமாகப் பிறர் நாட்டைச் சென்று தாக்கும் போர்.

அது, அத்துணைப் பாராட்டிற்கு உரியதன்று. மாற்ாக்'தன்' னாட்டு வளஞ் செழிப்பு கண்டு, பொறாமை கொண்டு

அந்நாட்டைக் கைக்கொண்டு அழித்துக் கொள்ளை கொள்ளும் குறுகிய நோக்கத்தோடு படையெடுத்து வரும் பகையர்சனின் படை வரிசையை எதிர்த்து அழித்துத் தன் நாட்ட்ைக் காக்க மேற்கொள்ளும் நின்று தாக்கும் போர் பாராட்டிற்கு உரியது. செல்வக் கடுங்கோவின் படைவீரர் கள், தங்கள் நாட்டின் மீது படையெடுத்து வந்த பகையரசர் களின் ஆற்றல்மிகு பெரும் படையை அழித்துத் தன் நாடு