பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 புலவர் கா.கோவிந்தனார்

காத்த கடமை வீரர் ஆதலாலும். அவர்கள் கபிலரின் பெரும் பாராட்டிற்கு உரியவராயினர். -

தம் உயிரிழப்பிற்கு அஞ்சாது நின்று பகையழித்து, நாடு

காக்கும் நாற்படையின் நலம் இதுவாக, நாடாளும் கர்வலனாம் செல்வக் கடுங்கோ, அந்நாற்படையால் காட்டும் பேரன்பு நலமும் பெருத்த பாராட்டிற்கு உரியதே. படைளிரர்கள். அத்தகைய பண்புடையராதல் அப்படைக்கு உரியோனாகிய நாடாள்வான், அப்படைவீரர் பால்-காட்டும் பற்றும் பாசங்களினாலேயே ஆகும். தன் வாழ்வும், தன் நாட்டின் வாழ்வும், அவ்வீரர்களின் நலத் தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதைக் கருத்தில் கொண்டு, மன்னன் வாழ்வே, தம் வாழ்வு; அவன் பொருட்டு உன்லயாது உழைப்பதே தம் கடன் என்ற உணர்வு அவ்வீர்ர் உள்ளத்தில், எக்காலத்தும் பசுமையாக ஊற்றெடுத்துப் பாய்ந்து கொண்டிருக்கும் வகையில், அப்படை வீர்ர்களின் வாழ்க்கை, வளங் கொழ் க்க வகை செய்வதையும், தன்னையும், தன் நாட்ட்ையும், காத்து

நிற்கும் அவர்க்கு ஊறு ஏதும் நேர்ந்து விடா வண்ணம், மெய் புகு கவசம்போல் இருந்து அவரைக் காப்பதையும் மேற் கொள்வதில் நாடாள்வான் விழிப்பாய் இருத்தல் வேண்டும். செல்வக் கடுங்கே பால், அவ்வுணர்வு ஆழ வேர் கொண்டிருப்பது க்ண்டு பாராட்டியுள்ளார் கபிலர். .

செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்’ என்ப. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து குற்றேவல் புரிவார்க்கு அடுக்கடுக்கான ஆணைகளை ஏவும் நெடுமொழி வழங்கவும், எண்ணிய இடத்திற்கு எண்ணியபோதே சென்று சேர வல்ல "ஊர்தி ஏறிச் செல்லவும் வல்ல வாழ்வில் வாழ்ந்து விடுவதி னாலேயே, ஒருவர் செல்வர் என மதிக்கப்படுவாரல்லர்: அவற்றிற்கு மட்டுமே பயன்படும் செல்வமும் செல்வமாகாது. மாறாகத் தன்னை வந்தடைந்தவர்களுக்கு நேரும் துன்பத்