பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசன்JD 73

திற்குத் தான் வருந்தி,அவர்தம்.துன்பம் துடைக்கத் துடிக்கும் இனிய உள்ளம் வாய்க்கப் பெற்றவன் செல்வமே செல்வம் எனப்படும். r “. . " -

"நெடிய மொழிதலும், கடிய ஊர்தலும் செல்வம் அன்று.

சேர்ந்தோர் புன்கண் அஞ்சும்.பண்பின் மென்கண்

- --- செல்வம் செல்வம் என்பதுவே'

என்பது நற்றிணை (210 காட்டும் நற்செல்வம். செல்வத் தின் நல்லிங்ல்: இதுவே என்பு:தை உணர்ந்தவன் செல்வக் கடுங்கோ. அதனால் தன் செல்வமெல்லாம் தன்னை வந்த்டைந்தார் அனைவரின் செல்வமாகச் சிறக்க வாழ்ந் திருத்தான். -

நாடுகாவல், நாடு காக்கும் நாற்படையின் நலம் பேனல், வந்தார்க்கு வாழ்வளித்தல் போல்வன நாடாள் வோன் பால் குறைவற நிறைந்திருக்க வேண்டியது இன்றி: மையாததே என்றாலும், அப்புற வாழ்க்கையிலேயே, அவன் வாழ்வு நிறைவுபெற்றதாகி விடாது. புற.அழகும்,அக அழகும் ஒருங்கே பெந்த ஒப்புயர்வற்றான் ஒருத்தியை வாழ்க்கைத் துணையாகப் பெற்ற நிலையிலேயே அவன் முழு மனிதனாக மதிக்கப்படுவான். செல்வக் கடுங்கோ, அத்தகு மனை வாழ்க்கையிலும் மாண்புடையவனாவன்.

அணிகள் பல அணிந்து அழகு பெற்று உயர்ந் எடுப் பான இளம் மார்பு: வரி வரியான கோடுகள் அமைந்து அழகு பெற்ற அல்குல்: அன்பும் அருளும் கொப்புளிக்கும் அகன்ற பெரிய கண்கள்: மலைவளர் மூங்கில் போல் வளம் பெறப் பருத்து நீண்ட வனப்புமிகு பெருந்தோள்; கற்பின் பொற்பு மிகுதியால், சேய்மைக் கண்ணும் சென்று மணம் கமழும் நல்ல நெற்றி: நவம ணி பதிக்கப் பெற்ற் செம்பொன் அணிகலன்கள் ஆகிய புறஅழகும். பெய் எனப் பெய்யும்