பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 8 |

யாதனைக் காண வேண்டும் என்ற அவாவோடு அரண் மனைக்குச் செல்கின்றார்.

அங்கே வீரர்கள் கொண்டாடும் வாள்விழா நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. விழுப்புண் படாத நாளெல் லாம் வீணான நாட்களாகக் கருதும் வீரர் அவர். போர்க் குறி காயமே புகழின் காயம்; அது புண் அன்று புகழின் கண்! என்ற எண்ணமுடையவர் அவர். போர்க்களத்தில், வெகுண்டு மேல் வரும் பகைவருடைய படையொழுங்கினைக் குலைத்து, அவரை வெற்றி கொள்ளும் வலிமையுடைய ஒளி' பொருந்திய போர்க் கருவிகளை ஏந்தியவர். யானைமேலும் குதிரைமேலும் வரும் வீரர்கள், பகைவர் எறியும் அம்பும் வேலும் தடுத்தற்குத் தம் கேடயத்தை மேலே ஏந்திச் செல்வர். அத்தோற்றம் மலையுச்சியில் நாட்காலத்த்ே தோன்றும் மழை மேகத்தின் தோற்றத்தை ஒத்திருக்கும். அத்தகைய வீரர்கள் வாள்விழவின் கண் தம். கையிலுள்ள வெற்றி பொருந்திய வாளினைச் சுழற்றி ஆடுவர். கழுத்தில் அணிந்திருக்கின்ற மாலை யுடலில் பின்னிப் பிணைவது போல நால்வகைப் படையின் துணைகொண்டு நாட்டின் எல்லையைப் பெருக்கினான். அகன்ற இடத்தையுடைய. ஊர்கள் பல நிறைந்த நாட்டிற்கு கிழவோனாயினான். அந் நாட்டின் வளம் கொழிக்க, பெரிய பெரிய நீர்நிலைகளைப் பல்ப்பல எடுத்து நீர் வளத்தையும் நில வளத்தையும் பெருக் கினான். புல்லுடைவியன்புலம் நிறைந்த அவன் நாட்டின் பெருவளத்தைக் கண்டு மகிழ்கிறார் கபிலர். முல்லைக் கொடிகள் புதர் போல, வளர்ந்திருக்கும் செழுமையையும், அதில் வெண்மையான, பூக்கள் மலர்ந்திருக்கும் வளமை யையும் காணுகின்றார். அந்தப் பூக்களில் உள்ள நறுமண மிக்க தேனைக் குடிக்க நீலநிறமான வண்டுகள் சூழ்ந்திருக் கின்றன. தேன் உண்டு களித்த வண்டுகள், காட்டிலே பிடவ மரத்தில் தொடுத்தாற்போன்று. மாலையாகத் தொங்கு கின்ற பூக்குலையிலே சென்று தங்குகின்றன. அங்கே அவ;.

- - 6-a.orrہL |