பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 புலவர் கா. கோவி ந்தனார்

கண்ட அழகிய காட்சி அவருக்கு வியப்பையூட்டுவதாக அமைந்தது.

உயர்ந்த பளிங்கு கலந்த சிவந்த பருக்கைக் கற்கள் நிறைந்த அந்த மேட்டுநிலத்தில் கதிரவனின் வெண்மையான கதிர்கள் பட்டு ஆங்கே இருக்கின்ற உயர்மணிகள் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. அவ்விடத்தே வாழ்வோர் அதனைப். பெற்று அந்த வாள் அவர்கள் உடலில் சுழன்று வருகிறது வெற்றி ம்ாலை அணிந்திருக்கும், அந்த வீரர்களின் இவ்விழாவினைக் கண்டு வியந்து நிற்கிறார் புலவ்ர். அவ்வீரர்கள் வெண்ணிற போந்தை மலர்களும் நீலநிற வானகப் பூக்களும் அணைந்து தொடுத்த மாலையை. அணிந்துள்ளனர். தாம் வழியிடைக் கண்ட வெண்ம்ை யான முல்லைப் பூக்கள் நிறைந்த புதர்களையும் அப்புதர்களில் அமர்ந்திருந்த நீல நிற வண்டுகளையும், அம்மாலையோடு ஒப்பிட்டுக் காண்கின்றார். இத்தகைய வீரம், மிக்க பெரும் படையினைப் பெற்றிருந்த காரணத் தால்தான் செல்வக் கடுங்கோ பல வெற்றிகளையும் அவன் பெற்றுச் சிறக்கிறான் என்பதையும் உணர்ந்தார். அம்மட்டோ! இடியோசையுடைய முரசங்கள் முழங்க போருக்குத் தலைமையேற்றுச் செல்கின்ற சிறப்பினை உடையவன் அவன். வஞ்சினம் மொழிந்து, பகைவரின் வேலேந்திய படையின் வலிமை முழுமையும் கெட், அவர் புற முதுகிட்டு ஒடுமளவிற்கு அவர்களைக் கொன்றழித் தான். பினங்கள் நிறைந்த அப்போர்க்களத்தே பகை வேந்தர் தோற்ற நிலையில் அடிபணிந்து யானைக் கூட்டங் களைத் திறையாக அளித்தனர். இவ்வாறு திறையாக பெரும் பொருள் பெற்றுச் சிறக்கும் அவன் தனக் கென வாழாமல் பிறர்க்கும் அளிக்கும் கொடைப் பெருமையும் உடையவன் என்பதை உணர்ந்தார் புலவர். அவன் அரண்மனையில் இரவவர்களுக்கு நெல்லினை வாரி வாரி வழங்குவதைக் காணுகின்றார். ஈத்தொரு