பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை - $3

மாவள்ளியனாம் வாழியாதன் பலருக்கும் நெல்வினை வாரி வாரி வழங்கியதன் காரணமாக நெல்லின ன யளக்கும் அம்பண அளவையின் வாய் விரிந்து தேய்ந் திருப்பதையும் காணுகின்றார். கொற்றமும் கொடையும் சிறக்கப் பெற்ற செல்வக் கடுங்கோவின் சிறந்த பல குணங்களையும் அவனோடு சில நாள் இருந்து அறிந்த புலவர் அவனிடம் விடைபெற்றுத் திரும்புகிறார். வழி யிடையில் செல்வக் கடுங்கோவைக் கண்டு பரிசில் பெறு வதற்காகச் செல்லும் பானனைக் காண்கின்றார். அப்பாணன் கையில் ஆயிரம் நரம்புகளை எல்லையாக உடையதாய் இசையாற் பெறலாகும் பேரின்புத்துக்கு இடமாக இருக்கும் பேரியாழ் இருக்கிறது. இன்னிசை பயக்கும் நரப்புத் தொடையால் குறைபாடின்மை தோன்ற இனிமையான பாலைப் பண்ணை மீட்டி மகிழ்கிறான் வாய்மையும், முதிய அறிவும் உடையவன் அவன். செல்வக் கடுங்கோ வாழியாதனின் கொற்றமும் வீரமும் கூறி, அம்பண அளவை விரிந்துறை போக்க ஆர்பத நல்குவன்' என அவன் கொடைச் சிறப்பையும் சொல்லி அவனிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகின்றார்.

செல்வக் கடுங்கோவின் வீரம், கொண்ட போன்றவை இப்பாடலில் சிறப்பிக்கப்படுகின்றன. வீரர்களின் வாள் - விழாவினை சிறப்பிக்கும் புலவர் போர்படுமள்ளர் "அணிந்த போந்தையும் வாகையும் விரவித் தொடுத்த மாலையையும் முல்லைப் புதரில் சூழ்ந்த கருவண்டுகளையும் ஒப்பிடுவது சாலச் சிறப்புடையது. - -

இதனை நன்குணர்ந்த சான்றோர்,

புதல் கும் പൂജ്ഞഖ': என்ற தொடரையே இப்பாட லுக்குப் பெயராகச் சூட்டினர்.”

"வாங்கிரு மருப்பிற் றிக்தொடை பழுனிய இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப்