பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஏம வாழ்க்கை

செல்வக்கடுங்கோ வாழியாதனின் நாட்டைச் சுற்றிப் பார்த்து வியக்கிறார் கபிலர், அவனுடைய நாட்டில் காண்போர் கண்ணையும் கருத்தையும் கவர்கின்ற உயர்ந்த மாட மாளிகைகள் நிறைந்திருக்கின்றன். அழகிய சித்திரங் கள் வரையப்பட்ட நீண்ட நெடிய மதில்களையுடைய உயர்ந்த சுவர்கள்; அவற்றின் அழகினை ஒவியத்திலும் எழுதிக் காட்ட முடியாது. அழகிய அந்த மாளிகைகளின் சுவர்களில் வரிசை வரிசையாக எழுதப்பட்ட சிறுகோடுகள் காணப்படுகின்றன. அரசன் பேருக்குச் சென்ற காலத்தில் அவன் பிரிவைத் தாங்க் இயலாத சிவந்த மகளிர் அவன் திரும்பி வரும் நாளைக் கருத்தில் கொண்டு அடையாளமாக எழுதிய கோடுகள்தாம் அவை. பிரிவாற்றாது உறக்கம் இன்மையால் அணிந்துள்ள அணிகலன்கள் நெகி: உடல் மெலிந்து நிற்கும் அப்பெண்களின் நிலையை உணருகிறார் புலவர். இயல்பாகவே சிவந்த அவர்களின் விரல்கள் குறித்த நாட்கள் பலவும் எழுதியமையால் மேலும் சிவந்து காணப் படுகின்றன, அழகிய வரிகளையுடைய சி ல ம் பி ைன அணிந்த அப்பெண்கள் பார்ப்போரை வருத்தும் அழகினை உடையவர்கள். இத்தகைய மகளிர் மனதைப் பிணிக்கும். மணம் கமழும் மார்பினையுடையவன் செல்வக்கடுங்கோ: காதல் மகளிரின் பிரிவையுணராத, காம வேட்கையில் ஓடாத மனதை உடையவன் அவன். அவன் சிந்தை முழுவதும் போரும், வெற்றியுமே நிறைந்துள்ளது. அவன் மட்டுமல்ல. அவனுடைய வீரர்களும் அ. த் த ைக ய.