பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

பதிற்றுப்பத்து தெளிவுரை

124 பதிற்றுப்பத்து தெளிவுரை

தளர்வற்ற மேற்கோளும் ஆம். ஒண் பொறிக் கழல் - ஒள்ளியவான செயல்கள் பொறிக்கப் பெற்ற கழல்; இவ் விரண்டுங் கூறியது, அப் பகைவரும் மறமாண்பிற் சிறந்தவர் என்பதற்காம், ஓடை - நெற்றிப் பட்டம். உரு - அச்சம். எருத்து பிடர். மாரு மைந்து - மாறுபடாத வலிமை; மாறு படல் வலிமை குன்றல். மாறுநிலை . மாறுபட்ட பகைமைத் தன்மை. தேய - கெட பகைமைத் தன்மை கெடல், அவர் தோற்று அழிந்ததனுல். பெரும்சமம் - பெரும்போர். ஆர்ப்பு - ஆரவாரம்; இது நார்முடிச் சேரலின் களவரவைக் கண்ட தும், அவன் படைமறவரின் ஊக்க எழுச்சியாலும், பகைமற வரின் அச்ச எழுச்சியாலும் அவர்களால் எழுப்பப்படுவது. அரைசு - அரசர். புரைசால் - மிகவுயர்வு அமைந்த மைந்து - வலிமை. மைந்த . வலிமை உடையோனே ஒம்பல் - காத் தல்; படைமறவரைப் பேணிக் காத்தல். பகையரசரின் பண்டைச் சிறப்பும், நாற்படை நலமும் கூறியது, அவை ஆவரால் நின்னேடு பகைத்தலாலே ஒழிந்தன என்பதற்காம். நினக்கு அஞ்சி ஒடியதல்ை, அவர்களின் ஓடாப் பூட்கை கெட்டது; ஒண்பொறிக் கழல் சிறப்பிழந்தது. அவற்ருல் அவர்கட்கு உண்டாயிருந்த பெருமை நின்னைப் பகைத்தலால் அழிந்தது என்றதுமாம்.

35. மெய்யாடு பறந்தலை!

துறை : வாகைத்துறைப் பாடாண்பாட்டு, வண்ணம் : ஒழுகுவண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : மெய்யாடு பறந்தலை. இதனுற் சொல்லியது : சேரலின் வென்றிச் சிறப்பு.

(பெயர் விளக்கம் : உரைசான்ற நின் வென்றி' என்று கூறிய்தேைல வாகைத்துறைப் பாடாண் பாட்டு ஆயிற்று.

'தலே துமிந்து எஞ்சிய மெய்யும் எழுந்து ஆடியபடியிருக் கும் கொடும்ையுடைய போர்க்களம்' என விசேடித்துக் கூறிய நயத்தாலே இப்பாட்டிற்கு இது பெயராயிற்று.

"குறையுடல் எழுந்தாடுவது ஒரு பெயர் உடையார் பலர் பட்டமை வழியன்றே: அவ்வாற்ருற் பலர் பட்டமை தோன்றக் கூறிய சிறப்பானே. இதற்கு மெய்யாடு பறந்தலை' எனப் பெயராயிற்று' எனக் கூறுவர் பழைய உரைகாரர்.)