பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

பதிற்றுப்பத்து தெளிவுரை

162 பதிற்றுப்பத்து தெளிவுரை

எதிர்த்தழித்தோர், நின் முன்னேருள்ளும் யாருமில்லை இப்பொழுதும் நினக்கு ஒப்பாவார் யாருமில்லை!

சொற்பொருளும் விளக்கமும் : பொலம் - பொன். தும் பை - தும்மைப்பூ பொறி - பூத்தொழில் வேலைப்பாடு: அரும்பு வேல்ைப்பாடும் ஆம் தூணி - அம்பருத் தூணி. செயலற்றுக் கிடக்கும் அம்புகளைப் புற்றடங்கு அரவின் ஒடுங்யே’ என்றனர்; அவை வெளிப்படின் புற்றினின்றும் றிேப் பாய்ந்து செல்லும் பாம்புகளைப்போல எதிரிகளைத் தேத்துக் கொல்வன என்பதனுல். அம்புமுனைகள் நஞ்சிற் ருேய்க்கப் பெறுவனவாதலால், இவ்வுவமை மிக்க பொருத்த் முடையதுமாகும். நொசிவு வளைவு; போர்க்குத் தயாராக இருக்கும் நிலை. நெர்சியா நெஞ்சு - பகைவரின் போர்த் திறன் முதலியவற்றைக் கேட்டதனலே சோர்வுற்று மடியாத நெஞ்சுறுதி. கதுவாய் எஃகம் - முனமுரிந்த வேல்; அதுதான் களிறெறிந்து பெற்ற சிறப்பினை உடையது என்றனர், அதனைத் தாங்கிய மறவரின் போர்த்திறனைக் காட்டுதற்கு. விழுமியோர் . சிறந்தோர்: முறை பிறழாதே போரிடுவோர். அகன்கண் - அகன்ற இடத்தையுடைய நாட்பு - போர்க் களம். எழுமுடி மார்பின் எய்திய சேரல் - பகையரசர் எழு வரது முடிப்பொன்னல் அமைந்த வெற்றியாரம் பொருந்திய மார்பினையுடைய சேரமான். ஞாட்பு' என்பது நாட்பென்று வந்தது: அகன்கண் ஞாட்பின்கண் எழுமுடியரசரைவென்று பெற்ற அவர் முடிப்பொன் எனினும் ஆம்.

குண்டுகண் அகழி - ஆழமான இடத்தைக் கொண்ட அகழி - அகழப்பெற்ற பள்ளம். கடந்து - வென்று கைப் பற்றி. உள் உண்டு அழித்த - உள் மதிலிடத்துச் சென்று, அங்குள்ள பொருள்களைக் கொண்டும் அழித்தும் கைப்பற்றிய. தாயம் . வழிவழி வரும் உரிமை. கணேயெழு - திரட்சிமிக்க கணையமரம்; கதவுக்கு வலுவாகப் பின்புறத்துக் குறுக்காக இடப் பெறுவது. ஊன் துவை அடிசில் - ஊனும் அரிசியும் குழையச் சமைத்த புலவு. பீடர் - பீட்டை உடையவர்: துணங்கை - ஒருவகைக் கூத்து. இது சேரமான் தன் வீரர் களுகுப் பெருவிருந்து அளித்த சிறப்பைக் கூறுவது: அனுவம் அவ்விடமிருந்து உண்ணல் மேலும் சிறப்பாகும்.

முள் - முள்வேலி. இடுபறியா - இடுதலை அறியா. ஏணி. எல்லைப்புறம்: நணியிரு முந்நீர் ஏணியாக (புறம் 35) என வருதலும் காண்க: தெவ்வர் - பகைவர். சிலை. வில்.