உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்தாம் பத்து

163

விசை - விசைத்து எய்யப் பெறும் அம்புகள். மூரி வெண்தோல் - மூரிப்பமைந்த எருத்தின் வெண்தோலால் அமைந்த கிடுகு; கிடுகு - கேடகம். விலங்குதல் -குறுக்கிடல். வளி கடவும் - காற்று மோதிச் செலுத்தும். துளக்கம் - அசைவு. வயங்குமணி இமைப்பின் வேல் - விளங்கும் செம்மணி போல ஒளிசிதறுகின்ற வேல்; இது பகைவரைக் குத்தியழித்துக் குருதிக்கறை நிலவிய வேலென உணர்த்தும். கமஞ்சூல் - நிறைசூல். வேலிடுபு - வேலை ஏற்றி நடப்பித்து என்பதாம். முன்னும் இல்லை - முற்காலத்தும் யாரும் இல்லை.

46. கரைவாய்ப் பருதி !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு: பெயர் : கரைவாய்ப் பருதி. இதனாற் சொல்லியது : குட்டுவனின் கொடைச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: ‘பலவாய போர்களிலும் வெற்றி கொண்ட கொல்களிற்றினைக் கண்டதும் அஞ்சிச் சிதறியோடிய பகைமறவர் பலரையும், குட்டுவனின் தேர்ச் சக்கரம் விரையச் செல்லுங்காலத்தே தன் அடிப்படுத்துத் தலை துணித்தது’ என, அதற்கும் களத்தே வெற்றி கூறிய நயத்தால் இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது.]

இழையர் குழையர் நறுந்தண் மாலையர்
சுடர்நிமிர் அவிர்தொடி செறிந்த முன்கைத்
திறல்விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேரியாழ் மாலை பண்ணிப் 5

பணியா மரபின் உழிஞை பாட
இனிதுபுறக் தந்துஅவர்க்கு இன்மகிழ் சுரத்தலின்
சுரம்பல கடவும் கரைவாய்ப் பருதி
ஊர்பாட் டெண்ணில் பைந்தலை துமியப்
பல்செருக் கடந்த கொல்களிற் றியானைத் 10