பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் வாழ்த்து

திணை : பாடாண் திணை. துறை : கடவுள் வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு.

[தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில், நச்சினார்க்கினியரால் எடுத்துக் காட்டப்படுவது இது. இச் செய்யுளைப் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாகக் கொள்வார்கள் தமிழ்ச் சான்றோர்கள். முதற்பத்தும் அதற்கு முற்பட்ட பகுதியும் மறைந்து போயினதால், கடவுள் வாழ்த்தையும் எதுவெனக் காணுமாறில்லை. ஆதலின், இதனைக் கொள்வது ஓரளவுக்கு ஆறுதல் தருவதாகும். இதனைப் பாடியவர் பெயரும் தெரிந்திலது.]

எரியெள்ளு வன்ன நிறத்தன்; விரியிணர்க்
கொன்றையம் பைந்தார் அகலத்தன்; பொன்றார்
எயிலெரி பூட்டிய வில்லன்; பயிலிருள்
காடமர்ந் தாடிய ஆடலன்; நீடிப்
புறம்புதை தாழ்ந்த சடையன்; குறங்கறைந்து 5

வெண்மணி யார்க்கும் விழவினன்: நுண்ணூற்
சிரந்தை யிரட்டும் விரலன்; இரண்டுருவாய்
ஈரணி பெற்ற எழிற்றகையன்; ஏரும்
இளம்பிறை சேர்ந்த நுதலன்; களங்கனி
மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன்; தேறிய 10

குலம் பிடித்த சுடர்ப்படைக்
காலக் கடவுட்கு உயர்கமா வலனே!

தெளிவுரை : எரிதீயையும் எள்ளி நகையாடுவதுபோல அமைந்த ஒளிரும் செந்நிறத்தை உடையவன்; விரிந்த பூங்கொத்துக்களையுடைய கொன்றை மலராலே தொடுத்கப்