பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து

183

ஆரும் பத்து Iss

இறை கொள்ளல் - தங்கியிருத்தல். அடும்பு , அடும்பங் கொடி. அடைகரை - மக்கள் இறங்கும் துறையுடைய கரைப் பகுதி. அலவன் - நண்டு. வடு - கோடு. அயிர் - நுண் மணல். ஊதை - வாடைக் காற்று. உஞற்றும் - முயன்று வீசும். தூவிரும் . தூய பெரிய போந்தை - பன. அணிப் பொலிதந்து - அணிகள் அழகுடன் விளங்கப் பொலிவுடன் வீற்றிருந்து.

இயலல் - நடத்தல். ஒல்கல் - அசைந்தாடல். மடமகள் . இளமகள். வெறியுறு நுடக்கம் - செல்வமேற்று ஆடுதலால் உண்டாகும் அசைந்த ஆட்டம். பெருமலை - இமயம். வயின் வயின் - இடங்கள்தோறும். விலங்கும் - குறுக்கிட்டுக் கிடக் கும். பெருந்தெய்வத்து - பெருந்தெய்வத்து வாழ்வோரும். வளை ஞரலும் - சங்கினம் முழங்கும். பனிப் பெளவம் - குளிர் கடல்; தென்கடல் மணந்த - ஒருங்கே கலந்து கூடியிருந்த, அந்தரம் . மேற்பக்கம். வண்பிணி - வளவிய பிணிப்பு. நறவு - நறவம்பூ, நெய்தற்பூவும் நறவம்பூவும் கண்போல விளங்குவன: இவற்றைக் கலந்து தொடுத்த மாலைகளாலே பந்தரின் மேற்பக்கம் வேயப்பெற்றிருந்தது என்க: இக் காலத்தும் பந்தரின் மேற்புறத்து வரிசைவரிசையாக மாலை களைத் தொங்கவிடுவதனைக் காணலாம். மடநோக்கு - மட பம் பொருந்திய பார்வை. வாள் நகை . ஒளியுடைய பற்கள். அமிழ்து வாயமுதம். பொதிதல் - நிரம்பியிருத்தல். துவர் வாய் - சிவந்த வா யி த ழ் க ள். அசைநடை - அசைந்து அசைந்து நடக்கும் நடை. சான்று - மிகவும் விரும்பி. நீடின. நெடிதே தங்கின. வெள்வேல் - வெள்ளிய வேல். மெல்லியன் . சிற்றின்பத்தே எளியன். நின் உணராதோர் . நின் போர் மறத்தை உணராதோரான பகைவர்.

மழை - மேகம். செயிர் - குற்றம்; அது நஞ்சுடைமை. அரவு - பாம்பு. எறிந்து - திாக்கி. மிடல் - வலிமை. புயல் ஏறு - இடியேறு. தாங்குநர் - தடுத்துப் போரிடும் பகைவர். தொடி - பூண். துமிக்கும் - வெட்டி வீழ்த்தும். எஃகு - வாள். வலத்தர் - வெற்றியுடையார். படைவழி வாழ்நர் - படைஞ ராகப் பணியேற்று வாழ்வோர். நீயும் அரவெறியும் பெருஞ் சினப் புயலேறனையை நின் படைவழி வாழ்நரும்’யானத் தொடிக்கோடு துமிக்கும் எஃகுடை வலத்தர்' என்று மற மாண்பை எடுத்துக் கூறுகின்றனர். s

போந்தை - பனே. வெண்தோடு - குருத்தோலை; ஆகு பெயரால் மாலையை உணர்த்திற்று. நிறம் பெயர்தல்'.