பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

பதிற்றுப்பத்து தெளிவுரை

216 பதிற்றுப்பத்து ேெளிவுரை

மலர்ந்த மார்பின் மாவண் பாரி முழவுமண் புலர இரவலர் இணைய வாராச் சேட்புலம் படர்ந்தோன் அளிக்கென 10 இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன் ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான் ஈத்தொறும் மாவள் ளியனென நுவலுகின் நல்லிசை தரவந் திசினே; ஒள்வாள் உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை 15 நிலவின ன்ன வெள்வேல் பாடினி முழவின் போக்கிய வெண்கை விழவின் அன்னகின் கலிமகி ழானே.

தெளிவுரை : பலாமரத்திலே கனியப்பழுத்து வெடித்த பலாப்பழத்தின் வெடிப்பிலிருந்து ஒழுகும் தேனை, வாடைக் காற்ருனது எடுத்துத் துாற்றும் வளமுடையது பறம்பு நாடு. அந் நாட்டிற் பொருந்திய பெரிய விறலினக் கொண்டவன்; ஒவியத்தே எழுதிற்ை போன்ற கைவினைத்திறம் பொருந்திய நல்ல மனையின் கண்ணே இருந்த கொல்லிப் பாவையைப் போன்ற அழகினையும், நற்பண்புகளையும் உடையாளின் கணவன்; பொன்போலும் நிறமுடைய பூவினையும், சிறிதான இலையினையும், பொலிவற்ற அடிமரத்தையும் கொண்ட உன்ன மரத்துக்குப் பகைவன்; எம் கோமான் பாரி. பூசிப் புலர்ந்த சந்தனத்தையும், குன்ருத கொடையினையும், அகன்ற மார் னையும் கொண்டோளுகிய பெரிய வள்ளலான அவன்ருன்,

முழவிடத்தே பூசிய மண்ணுனது காய்தலுற்றுப் போக வும், அவனைப்போல வழங்குவார் இல்லாமையாலே இரவலர் கள் பெரிதும் வருத்தமுறவும், மீண்டும் இவ்வுலகத்திற்குத் திரும்பி வருதலற்ற மேலுலகிற்குச் சென்றுவிட்டான்.

ஒள்ளிய வாளேந்திய படைமறவரும், வண்மையுடைய களிறுகளும் சூழப், புலால் நாற்றம் பொருந்திய பாசறை யிடத்தே, நிலவைப்போல விளங்கும் நின் வெள்ளிய வேலைப் புகழ்ந்து பாடும் பாடினியானவள், முழங்கும் முழபின் தாள வொலிக்கேற்பத் தாளத்தை அறுத்து, இசையமைதியோடு வெறுங்கையை அசைத்து அசைத்துப் பாடுகின்ருள். விழாக் களம் போல விளங்கும் நின் ஆரவாரமிக்க திருவோலக்கத் திடத்தே யானும் வந்தேன். -