பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

பதிற்றுப்பத்து தெளிவுரை

260 பதிற்றுப்பத்து தெளிவுரை

பிடித்துக் கொணர்ந்தனர். சிதறிய செவ்விய புள்ளிகளைக் கொண்ட சுலைமான் அது. கன்வ்ப்பட்ட மரக்கொம்பைப் போலத் தோன்றும் கவறுபட்ட கொம்பினையுடையது ஆது, அந்தப் புள்ளிமாளின் தோலையுரித்து, அதனின்றும் ஊனப் போக்கினர். மற்றும் அதன்பாலுள்ள தீதானவற்றையும் களைந்தனர். எஞ்சி நின்ற தோலை வட்டமாக அறுத்து, ஒளிவீசுமாறு பாடஞ்செய்து கொண்டனர்.

அங்ங்ணம் வட்டமாக அறுத்துக்கொண்டமான்தோலின் ஓரங்களிலே மேலே சொல்லிய கலன்களையும் முத்துக்களையும் ஒன்றற்கொன்று இனமாகும்படி முற்ையே அமைத்துக் கட்டினர். கூர்மையுடைய இரும்பிளுலே அத்தோலின் உட்புறத்தே வரைவதற்கு உரியவெல்லாம் முறையே வரைந்து செப்பமாக அமைத்தனர். அதன்பின்னர் யாகஞ் செய்யுஞ் தொழிலிலே வல்லோன், செவ்வொளி விட்டுவிட்டு ளிறும் தோற்றத்தையுடைய அதனை, நின் தேவியின் தோளிலே சூடுவதற்குரிய நிலையிலே அ மையச் செய்தான். வானத்தே பறந்து திரியும் மரபினையுடைய பருந்துகள் அத் தோலை ஊனென மயங்கி அடையக் கருதின.

அத்தகைய மான்தோலோடு நல்ல ஒளிபெற்ற சிறந்த மணிகள் பொருந்திய அணிகலன்களையம் அணியப்பெற்ற நல்ல தோள்களை உடையவள்: சுருளமைந்த கூந்தலையும் ஒளி யமைந்த நெற்றியினையும் உடையவள்: நின் தேவியாவாள். அவளுடைய கருவிலே தோன்றிப் பத்து மாதங்களும் முறையே நிரம்பியபின், பேரறிவு அமைந்த்வளுகஷ்ம் ம்ென் மையும் செம்மையும் உட்பட்ட் பிற நற்குணங்கள் பொருந்தி யவனகவும், காவற்பணி பூண்பதற்கு அமைந்த அரசியல் துறைகளில் எல்லாம் முற்றவும் பயின்று நிரம்பியவளுகவும் விளங்கும் சிறப்புமிக்க நின் புதல்வனையும் நீதான் பெற்றன்! நின் குலம் தழைக்குமாறும் இவ்வுலகத்தோர் வாழுமாறும் நினக்குரிய அரிய கடமையைச் செய்து முடித்தவனகிய, போரை விரும்புகின்ற தலைவனே!

நீதான் நல்ல புதல்வனை விரும்பி வேள்வி செய்தாய் என்றும், அதன் பயனுகப் புதல்வனைப் பெற்றன என்றும் எண்ணி, யானும் மயங்குவேன் அல்லேன். நின்னிடத்தே பணி பூண்டு, தன் புரோகிதத்தொழிலை முழுதும் உணர்ந்து கடைப் பிடித்துவரும் நரைத்த முதியோனுக்கு, வண்மையும், மாண்பும், வலனும், மக்கட்பேறும், தெய்வ சித்தியும், மற்றும் பிறவான ன் மைசளும் முற்செய்த தவமுடை