பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாம் பத்து

291

ஒன்பதாம் பத்து 29.1

போன்ற தோற்றத்தையும், இடியனைய முழக்கையும் உடைய வான இளங்களிறுகள், வலிமை மிகுந்தவாய்ச் செல்லுங் காலத்து, அவற்றின் காலடிப்பட்ட முளைத்த மூங்கில்கள் தம் கிளைகளோடும் அழிவெய்தும். அதன்ைப்போலவே, நின்னை பகைத்தோரும் தம் கிளையோடும் அழிவை அடைவர்!

தோலாற் போர்த்தலையுடைய தண்ணுமைகளின் ஆர்ப் பொலியானது எழுந்து போரினை மேற்கொள்ளும்ாறு ஏவிற்று. படைமறவரும் துன்பத்தையுடைய தொழிலான போரிடுதலைச் செய்தனர். வேற்படைகள் நெருங்கிய அத் தகைய போர்க்களத்திலே, போரை விரும்புகின்ற விருப்பத் தினையும். நீங்காத வலிமையினையும் உடையவரான மறவர் கள், சாவின_ஏற்று நிலத்தே வீழ்ந்தனர். இடியினல் தாக் குண்ட மலைகளைப்போலக் களிறுகள் நிலத்தே பட்டு வீழ்ந் தன. நிலையாமையே பொருந்திய இத்தகைய போர்கள் பல வற்றைச் செய்து வெற்றி பெற்றவரான நின் படை மறவர் கூடி நின்று ஆரவாரிக்கும் பாசறையிருக்கையினை. யாமும் இனிதாகக் கண்டோம்.

பெய்தற்குரிய காலத்தே மழை பெய்து, அதல்ை உழவு முதலாகிய தொழில்கள் முறையே நிகழச்செய்து, மலையினை அடைந்த மேகமானது, நெடுங்காலம் அம்மலையிடத்தேயே தங்கியிருந்து பின்னர்ப் பெருமழையையும் பெய்யத் தொடங் கவும், அதனல் களிப்புற்ற பலவகைக் குரல்களையுடைய பறவைகளின் ஆர்ப்பொலி எழுந்தாற்போல, நின்னைச் சூழ ஆரவாரித்திருக்கும், நின் மறவர் திரளின் ஆரவாரமான் இருப்பினையும் யாம் இனிதாகக் கண்டேம்!

சொற்பொருளும் விளக்கமும் ஏறுஏய - எறிதலைப் பொருந் திய கடிப்பு . குறுந்தடி முரசினை முழக்குவதற்குப் பயன்படு வது. போர்ப்புறு முரசம்.கொல்லேற்றுத்தோலால் போர்க்கப் பெற்றுள்ள வெற்றி முரசம். கண் - அடிக்கும் இடம்; முரசின் நடுப்பாகம். அதிர்தல் - விட்டு விட்டு ஒலித்தல். கார்மழை. கார்காலத்து மேகம். முழக்கு - இடிமுழக்கம். வெளில் - தட்டுத்தறி, நீவி - கட்டினே ஆறுத்து. அணந்து - நிமிர்ந்து. தொழில்நவில் - தொழிற் சிறப்புடையதென்று சொல்லப்படு ன்ற். பார்வல் - பார்வை: ஆகு பெயராய்ப் பார்த்தற் குரிய இடங்களைக் குறித்தது. பூழியர் - பூழி நாட்டார். பொறை . இரும்பொறை நாட்டினனே. சவட்டும் - அழிக் கும். முன்பு - வலிமை. கூற்றம் - உயிரைக் கூறுபடுத்துவது.