பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

54

பதிற்றுப்பத்து தெளிவுரை


லும் அவர்க்குச் சிறிது தருவீர்களாக. பின்னும், அது தவறாகாது. மண்ணணுச் செறிந்த இந்த உலகைக் காத்தலை மேற்கொண்ட தண்மையான இயல்பைக்கொண்ட மேகங்கள், தாம் பெய்தலைச் செய்யாவாய் மாறுபடலாம். அதனால் நிலைபெற்ற உயிர்கள் பலவும் அழிவை அடையலாம். பலவாண்டுகளாக, இவ்வாறு மழை பொய்த்தலாலே உலகுயிர்கள் வருத்தமுற்ற போதிலும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பின்னும் பின்னும் நம் விருப்பம் பொய்ப் படுமாறு நமக்கு ஏதேனும் தாராதிருப்பான் அல்லன். மீள மீளச் சென்றாலும் நிரம்பத் தருவான். ஆதலினாலே, பெற்ற செல்வத்தைப் பிறருக்கும் உவந்தளித்து அனைவரையும் மகிழ்விப்பீராக!

சொற்பொருள் : கள் - மது. திற்றி - தின்னற்கு உரியவான ஊன் துண்டங்கள். ஒலிவரல் - தழைத்தல். அடுப்பு வழங்குக - அடுப்படித் தொழிலிலே ஈடுபடுக. சேரலாதனிடம் பரிசில் பெற்றுவரும் பர்ணர் தலைவனது களிப்பின் வெளிப்பாடு இது. நாடு வறங்கூர்ந்த காலத்தும் சேரலாதன் நமக்கு உதவிக் காப்பான் என்று உரைக்கும் உறுதிச்சொல் சேரலாதனின் தண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். தண்ணியல் - தண்ணிதாம் இயல்புடைய. இரவலனே புரவலனாகிப் பிறரை உபசரிக்கின்ற் செவ்வி இதன்கண் காணற்கு உரியது. இது சேரலாதனின் வண்மைமிகுதியைப் போற்றுவது ஆகும்.

19. வளனறு பைதிரம் !

துறை பரிசிற்றுறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும், தூக்கு: செந்தூக்கு. பெயர்: வளனறு பைதிரம். இதனாற் சொல்லியது: சேரலாதனின் வெற்றிச் சிறப்பும் அவன் குலமகளோடு நிகழ்த்தும் இல்வாழ்வின் இன்பச் செவ்வியும்.

[பாசறைக்கண் உள்ளான் தலைவன். அவன்பாற் சென்று, பாணன் தலைவியின் பிரிவுத்துயரத்தைப் போக்கி உதவுமாறு இரக்கின்றான். இத் துறையமைதியினாலே இப் பாட்டு 'பரிசில் துறைப் பாடாண் பாட்டு' ஆயிற்று: 'அவ்வினை மேவலையாகலின்' எனவும், யார் சொல் அளியை' எனவும் சொற்சீர் வந்தமையால், 'சொற்சீர் வண்ண'மும் கூறப்பட்டது. 'வாழ்தல் ஈயா' என்னும் அடையின் சிறப்பால் வளனறு பைதிரம்' என்னும் பெயர் அமைந்தது.]