பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இரண்டாம் பத்து

57

 "தத்தம் உயிர்பிழைக்கும் பொருட்டாசுத் தத்தம் ஊர்களை விட்டு நீங்கியமையால், அவ்வவ்வூர்களிலிருந்த விளைநிலங்கள் எல்லாமே வாட்டமுற்றன. அவருள் எவருமே உயிர்வாழ்ந்திருத்தல் என்கின்ற ஒரு தன்மையை நீயும் அவர்க்குத் தாராமையினாலே, நின்னைப் பகைத்தோரது நாடுகள் எல்லாமே வலிமைகெட்டு அழிந்துபோன தன்மையாயின.

வயல்களைச் சார்ந்துள்ள நீர்நிலைகளுள் முன்காலத்தே அழலைப்போலச் செந்நிறத்தோடே விளங்கும் செந்தாமரை மலர்கள், ஆம்பல் மலர்களோடும் சேர்ந்து மலர்ந்திருந்தன. நெல்விளையும் வயல்களிலே நெய்தல்மலர்கள் பூத்திருந்தன. விளைந்த நெற்கதிரை அரிவாரது கொய்யும் வாள் இவற்றாலே தம் வாய் மடங்கிப் போயின. கரும்பு வெட்டுவோர் சாற்றைப் பிழிகின்ற எந்திரத்திலுள்ள சாறுபாயும் பத்தல் சிதைந்து போயிற்று. இந்நிலை இன்றைக்கோ அன்றைக்கோ அன்று: தொன்றுதொட்டே இத்தகைய வளங்களாலே அந்நாடுகள் மிக நல்லவையாகவே இருந்தன. இப்போது நின்னைப் பகைத்தலினாலே அழிவுற்ற அவற்றின் அழிவைக் கண்டோரெல்லாம், தத்தம். வாயாரச் சொல்லிச் சொல்லித் தம் கைகளை மார்புக்கண்ணே அறைந்து இரக்கங்கொள்வர்! பலவகை வளன்களாலும் மாட்சியுற்றிருந்த அவர்தம் வள நாடுகள், இப்போது, கெட்டு அழிந்த தன்மையை உடையவாயின, பெருமானே! இனியேனும், நின்போர்வினையை மேற் கொள்ளுதலை மறந்தாயாய், நின் தேவியுடன் இனிதே கூடி இருப்பாயாக!

சொற்பொருள் முதலியன : கொள்ளை வல்சி - கொள்ளை யிட்டுப் பெறலாலே கிடைக்கும் பொருள்களாற் கொள்ளும் உணவு. கூளியர் - கூளிப்படையினர். இவர் படையணிகட்கு முற்படச்சென்று அவை செல்லுவதற்கேற்ற வழியமைத்துத் தருபவர். 'கவர்காற் கூளியர்' என்றது, அவர் மென்மேற் சென்றுகொண்டே இருப்பவராதலினால். 'கூர்நல் அம்பின் கொடுவிற் கூளியர், கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில் கொள்பதம் ஒழிய வீசிய புலனும்' என இவரைப் பற்றிக் கல்லாடனாரும் (புறம், 23) கூறுவர். கவர்கால் - செலவையே விரும்பின கால்; 'கவர்வு விருப்பாகும்' என்பது தொல்காப்பியம் (சொல் 362). கல்லுடை நெடுநெறி - கற்களையுடைய நெடிய வழி: இது மலைப்பாங்கில் அமைந்த வழி. 'நெடுநெறி போழ்ந்து' என்றது, குறுக்கிட்ட பாறை முதலான தடைகளை உடைத்து வழிசெய்து என்றதாம். 'சுரன் அறுப்ப’ என்றது