பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பத்து

59

இரண்டாம் பத்து 59

கொண்டு செல்லும் தூம்புடைய தோற்கருவி. தொன்றேர் காலை தொன்றுதொட்டே. நல்ல - நல்வளம் உடையவா யிருந்தன. கைபுடைத்து இரங்கலாவது அழிபாட்டின் கொடுமையைக்கண்டு ம்னம்தாளாமல் கையால் மார்பில் அடித்தவாறு வருந்துதல். மாண்டன பல முன்பு: ஆயின்

, அவையெல்லாம் மாணு மாட்சிய ஆயின வென்று முடிக்க, *

நின்னைப் பக்ைத்தோர் அரசர்; எனினும், நீதான் அவர் நாட்டையே முற்றவும் அழித்து, மக்களை அலைக்கழியவிடுதல் பொருந்துமோ என்பார்போலச் சேரலாதனைப் பகைத்தவர் நாட்டின் பேரழிவைக் கூறுவதன் மூலம், அவன் போர் மறத்தை உணர்த்துகின்ருர். இதனைச் செய்யும் நீதான் நின் தேவியின் அழிவை நினைப்பாயோ?" என்று வருந்தி உரைப் பதுமாகலாம். s

'மாணு மாட்சியாகிய என்றது, மேலும் அவர்தாம் தம் நாட்டை வளப்படுத்தும் வன்மையைப் பெருதவாறு, நீதான் வலியவரான ஆடவரை முற்றவும் அழித்ததனலும், எவரை யும் சென்று தொழில் செய்வதற்கு இசைவளிக்காத தலுைம், அவை வளனறு பைதிரமாகவே இனி என்றும் விளங்கும் போலும் என்பதாம். - .مر

இதனுற் சேரலாதனின் பாசறை இருக்கையும், பகை யொழிக்கும் மறமாண்பும் உரைத்து, தேவியின் நலிவையும் சொல்லி, இப் போர்மறச்செயலை நிறுத்திவிட்டுத் தேவியைக் காத்தருளச் செல்லுமாறும் குறிப்பாக உரைக்கின்றனர்.

20. அட்டுமலர் மார்பன் !

துறை : இயன்மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர் : அட்டுமலர் மார்பன். இதற்ை சொல்லியது : சேரலாதனின் போர் மறமும் கொடை மறமும்.

(சேரலாதனின் இயல்புகளைக் கூறி வாழ்த்தியமையால் இது இயன்மொழி வாழ்த்து ஆயிற்று. இரு முந்நீர்", 'முரணியோர்', "கடிமிளை', 'நெடுமதில் எனவெழுந்த வஞ்சி யடிகளான் வஞ்சித் தூக்கும் ஆயிற்று. செருக்கினற் கொண்ட மகிழ்வினை, அடாஅ அடுபுகை அட்டுமலர்