உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

பதிற்றுப்பத்து தெளிவுரை

மார்பன்' என்று நயம்படக் கூறிய சிறப்பால், இப் பாட்டுக்கு இது பெயராயிற்று. சேரலாதனிடம் பரிசில் பெற்றுச் செல்வானாகிய பாணன் ஒருவன், இடைவழியிலே எதிர்ப்பட்டான் ஒரு பாணனுக்குச் சேரலாதனின் கொடைத் திறத்தை எடுத்துச்சொல்லி, அவனிடம் செல்லுமாறு வழிப் படுத்துவதாக அமைந்த பாட்டு இது.]

நுங்கோ யாரென வினவின் எங்கோ
இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன்; வாழ்கவவன் கண்ணி! 5

வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே
கனவினும் ஒன்னார்தேய வோங்கி நடந்து 10

படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும்
கடாஅ யானைக் கணநிரை யலற
வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து
புலவர் ஏத்த வோங்குபுகழ் நிறீஇ
விரியுளை மாவுங் களிறுந் தேரும் 15

வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக்
கடிமிளைக் குண்டு கிடங்கின்
நெடுமதில் நிலைஞாயில்
அம்புடை யாரெயில் உள்ளழித் துண்ட
அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன் 20

எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும்
பரிசின் மாக்கள் வல்லா ராயினும்
கொடைக்கடல் அமர்ந்த கோடா நெஞ்சினன்
மன்னுயிர் அழிய யாண்டுபல மாறித்
தண்ணியல் எழிலி தலையா தாயினும் 25