88
பதிற்றுப்பத்து தெளிவுரை
கடுங்கால் ஒற்றலிற் சுடர்சிறந் துருத்துப்
பசும்பிசிர் ஒள்ளழல் ஆடிய மருங்கின்
ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி
முனையகன் பெரும்பா ழாக மன்னிய
உருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை
10
வரையிழி யருவியின் ஒளிறுகொடி நுடங்கக்
கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ
நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே.
தெளிவுரை : இடிபோல ஒலிமுழங்கும் முரசினோடு, பெரிய மலையினின்று அதன் பக்கத்தே வீழும் அருவியினைப் போன்று ஒளியுடன் விளங்கும் கொடியானது அசைந்து கொண்டிருக்க, விரைந்த செலவையுடைய பறவையினைப் போன்ற விரைவுடனே, நீ நின் நெடிய தேரை ஓட்டிச் சென்ற பகையரசரது பரந்தஇடத்தினையுடைய நாடானது
நின் குதிரைப்படைகள் புகுந்து போரிட்ட வயற்புறங்களிலே இனிக் கலப்பைகள் உழவைச் செய்ய மாட்டா; மதமொழுகும் தலையினையும் கொடுமையினையுமுடைய நின் யானைக்கூட்டங்கள் பரந்த வயற்புறங்கள் இனித் தம்பால் வளமை பரவுதலை அறியா நிலையை அடைந்தன. நின் படை வீரர் சேர்ந்திருந்த மன்றங்கள் கழுதைகள் சென்றிருக்கும் பாழிடங்களாயின. நின்னால் கோபிக்கப்பெற்ற பகைவரது நிலைபெற்ற மதில்கள் காவல் வேண்டாதவாறு அழிவடைந்தன. கடுமையான காற்று மோதுதலாலே நீ இட்ட தீயானது சுவாலை மிகுந்து சினங்கொண்டதாய்ப் பசும் பிசிரையுடைய ஒள்ளிய அழலாகப் பற்றி எரிந்த பக்கங்கள், ஆண்டலைப் பறவைகள் திரிந்து கொண்டிருக்கும், கானம் தீய்ந்துபோன கடத்தற்கரிய வழியினைக்கொண்ட, ஆறலைகள்வர் வழிப்பறி செய்யும் போர் முனைகளைக் கொண்ட, அகன்ற பாழிடங் களாக நிலைபெற்றன, பெருமானே!
சொற்பொருளும் விளக்கமும் : உரும் - இடி. உறழ்பு - ஒத்து. இரங்கல் - ஒலித்தல். வரை - பக்கமலை. ஒளிறு - விளங் கும். நுடக்கம் - அசைவு. கடும்பரி - விரைந்த செலவு. சிறகு - சிறகையுடைய பறவை; சினையாகு பெயர். கதழ்வு - விரைவு. கடும்பரி - விரைந்த செலவு: கடும் செலவையுடைய குதிரையும் ஆம்; அப்போது, கடுமையான விரைவோடு செல்லுதலையுடைய குதிரைகள் பறவையைப்போலப் பாய்ந்து