பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

பதிற்றுப்பத்து தெளிவுரை

90 பதிற்றுப்பத்து தெளிவுரை

பெயன்மழை புரவின் ருகிவெய் துற்று வலமின் றம்ம காலையது பண்பெனக் கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப் பீரிவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் 10

காடுறு கடுநெறியாக மன்னிய

முருகுடன்று கறுத்த கலியழி மூதூர் உரும்பில் கூற்றத் தன்னகின் திருந்துதொழில் வயவர் சீறிய நாடே.

தெளிவுரை : நின் பகைவர் நாட்டிலுள்ள செல்வர்களின் தேர்கள் பரவிச்சென்றதனலே சேறுபட்ட வயற்புறங்கள், பின்னர் ஏர்கள் சென்று பரிந்து உழுதலை வேண்டாவாயிருக் கும். பன்றிகள் தம் கொம்புகளாற் கிளறிய கொல்லைப் புறங்கள் ஏறுபூட்டி உழுதலைப் பின்னர் வேண்டாவாக விளங் கும். தயிர் கடையும் மத்தின் ஒலிமுழக்கம் எழுகின்ற ஆய்ச்சியரின் மனைகளிலே, இனிய வாச்சியங்களின் முழக் கிசை கேட்கப்படாதே போகும். இவ்வர்ருக அந்நாடு முன்பு விளங்கிய செழுமையான வளத்தினது தன்மையைக் கண்டு நன்கறிந்தவர்கள், இப்போது அதனை நினைப்பாராயின், நினைக் கும் நெஞ்சம் நோவத்தக்க வருத்தமே உண்டாகும். யானும் அதனை எண்ணியே வருந்தா நிற்கின்றேன்.

காலத்தாற் பெய்தலையுடைய மழைதான் பெய்யாமற் பொய்த்தமையாலே, வெம்மையானது மிகுதிப்பட்டு நாடு நலம் பயப்பது இன்ருயிற்று. இதுதான் காலக் கோளாற்றின் பண்பாகும்’ என்று சொல்லியவராக, அந்நாட்டு மக்களும், பனித்த கண்களிலே துளிர்த்தநீரை மிகத் தாங்கியவராகத், தம் கைகளைப் புடைத்தவுராக, நெஞ்சத்தேயும் மெலிவுற்ற தன்மையராயினர். இவ்வாறு அவர்கள் வருத்தத்தை அடை யுமாறு, பீர்க்கங் கொடிகள் படர்ந்த வேலிசூழ்ந்த பாழ்மனை களும், நெருஞ்சி பரந்த காடுபட்ட கடத்தற்கரிய வழிப்பகுதி களுமாக அவ்விடங்கள்தாம் நிலை பெற்றன, பெருமானே!

முருகப் பெருமான் வெகுண்டு பொருது அழித்தலாலே செல்வக் களிப்பை இழந்துபோன மூதூர்களைப் போல, பிறராலே நலிவுறுதல் என்பதில்லாத கூற்றத்தைப் போலும் வலிமையுடையவரான, நின்னுடைய திருந்திய தொழிலை