பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மூன்றாம் பத்து

91

 யுடைய படைமறவர்கள் வெகுண்டு பொருதழித்த நாடுகளின் நிலைதான் இவ்வாறு அழிவுடைத்தாயின, பெருமானே! என்பதாம்.

சொற்பொருளும் விளக்கமும் : தேஎர் - தேர்கள்: இவை பரந்த புலம் என்றார், அவை மிகுதியாக நிறைந்திருந்த நிலையை உரைத்தனர். தேர்ச் சக்கரங்கள் ஓடியோடிச் சேறுபட்ட வயல்கள் உழாதேயே விதைத்தற்குரிய பக்குவத்தை அடைந்தன என்று, தேர்களின் மிகுதியையும், அவற்றைச் செலுத்தும் வலனுடையாரின் பெருக்கையும் உரைத்தனர். களிறு - ஆண் பன்றி; களிறாடிய புலம்; என்றது, பன்றிகள் உழுத தரிசாகக் கிடந்த கொல்லைப் பகுதிகளை; அவைதாம் அப்படியே புழுதிபட்டு மீண்டும் உழாதே வித்துதற்குரிய தன்மையடைந்தன என்பதாம். 'மத்து உரறிய மனை இன்னியம் இமிழா' என்றது, மத்தொலியின் மிகுதியைக்கூறி, அவ்விடத்துள்ள பாற்பயனின் செழுமையை உரைத்ததாம். இவ்வளன் எல்லாம் இப்போது அவ்விடத்து இல்லையாயின என்றனர், 'நினைப்பின் யான் நோகு' என்றனர். நாஞ்சில் - கலப்பை. பண்டு - பண்டிருந்த வளமை; காலவாகுபெயர். 'நோதக வருமே' என்றது. பண்டு அறிந்தார் யாவரேயாயினும், இன்று இந்நிலை காணின் அப் பண்டைய நிலைதான் கெட்டதனை நினைந்து வருந்தாதிரார் என்பதாம்.

நின்னால் அழிவுற்ற அந்நாட்டிற்கு மேலும் வருத்தம் தருவதுபோலத் தெய்வமும் கொடுமை செய்தது என்பார், காலத்தாற் பெய்தற்குரிய மழையுங்கூடப் பெய்து புரத் தலின்றி, எங்கணும் வெம்மை மிகுதிப்படச் செய்தது என்றனர். புரவு - காத்தல். வெய்துற்று - வெம்மையை மிகுதியாகப் பெற்று, வலம் - நன்மை. பனித்தல் - துளித்தல். மலிர் - மிக்க நீர். புடையூ - புடைத்து. சிறுமை - துன்பம்: வறுமைத் துயரம். காடுறு - காடாகப் பெரிதும் முளைத் தடர்ந்த நிலை; இது அழித்துப் பண்படுத்தற்கு இயலாது போயினமையால். 'காலையது பண்பெனக், கண்பனி மலிர் நிறை தாங்கிக், கைபுடையூ, மெலிவுடை நெஞ்சினர், சிறுமை கூர' என, அந்நாட்டு மக்களின் துயரமிகுதியைக் கூறினர். பெருமைப்பட வாழ்ந்த அவர், சேரனால் வந்துற்ற அழிவையும், தொடர்ந்து மழை பொய்த்தலினால் வந்துற்ற கொடுமையின் நிலையையும் கண்டு வெதும்பித், தம் நெஞ்

=+