உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க. இரண்டாம் பத்து. தூக்கு - செந்தூக்கு. பெயர் - (கஉ) சான்றேர்மெய்ம்மறை. பூதங்கள் ஐந்தையுமெண்ணாது (ச) விளக்கத்துக்கு யென்பது 15. இரண்டும் தீயை ஒழித்தது, மேல் உவமமாக எண்ணுகின் றவற்றோடு கூட்டவேண்டி ஈண்டுக் கோளென்றது, விளக்கமில்லா. இராகுகேதுவென்னும் நீக்கி நின்ற ஏழினும் சிறப்புப்பற்றி வேறெண்ணப்பட்ட திங்கள் ஞாயிறென்னுமிரண்டும் நீக்கி நின்ற ஐந்தையுமென்பது. ச. ஐந்தென்று தொகை கூறியது, நாள் கோளென்னுமவற்றைத் தொகைக்கூற்றின் ஒரோவொன்றாக்க வென்பது. கக. எழுமுடியென்பது ஏழுஅரசரை வென்று அவர்கள் ஏழுமுடி யானுஞ் செய்ததோராரமாம், கஉ. நோன்புரித்தடக்கையென்றது வலிபொருந்து தலையுடைய தடக் கையென் றவாறு. ஈண்டுச்சான்றோரென்பது போரில் அமைதியுடைய வீரரை மெய்ம் மறை-மெய்புகு கருவி; மெய்ம்மறையென்றது, அச்சான்றோர்க்கு மெய்புகு கருவிபோலப் போரிற்புக்கால் வலியாய் முன்னிற்றலின். இச்சிறப்புநோக்கி இதற்கு, 'சான்றேர் மெய்ம்மறை' என்று பெய

ராயிற்று.

கங. வானுறைமகளிர் நலன் இகல் கொள்ளுமென்றது வான் அர மகளிர் அழகிற்கு அவளையொப்பேன்யானே யானேயென்று தங்களில் மாறு கொள்ளுமென்றவாறு. கரு. ஒடுங்கீரோதி - சுருள். (க) நிலமுதற் பூதநான்கும்போலப் பெருமை (உ) அளத்தலரியை ; (ங) நாண்மீன்முதல் (ச) ஐந்தையும் விளக்கத்தால் ஒப்பை ; (எ) கைவண் மையால் அக்குரனென்பவனையொப்பை; அன்றி (கூ) முன்ப, நின்வலியிருக் கும்படி சொல்லிற் (கா) கூற்றுவெகுண்டுவரினும் அதனையும் மாற்றும் வலி யையுடையை; ஆதலாற்(க௨) சான்றோர்மெய்ம்மறை, (கரு) கொடுங்குழை கணவ், (கா)படையேருழவ, பாடினிவேந்தே, (உ0) நின்குடி முன்முதல் வர்போலநின்று (உக) நல்லிசையைநிலைப்பித்து (உஉ) இவ்வுலகத்தோடு கூடக் கெடாதொழிவாயாகவென வினை முடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன் பலகுணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு றி வாழ்த்தியவாறாயிற்று. (உ) 'அளப்பரியையே' எனச்சொற்சீரடிவந்தமையாற் சோற்சீர்வண் ணமுமாயிற்று; ஈண்டுச் சொற்சீரென்றது, அளவடியிற்குறைந்தும் வஞ்சி யோசையன்றி அகவலோசையாயும்வரும் அடியினை, 2