பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


ஈரம் சொட்டியது. மெய்ம் மறந்து அப்படியே வீற்றிருந்தார். உடனே அவருடைய உதடுகள் அசையலாயின. ஒலி கூடியது. 'திருந்தப் புவனங்க ளின்ற பொற்பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறியறுவர் கொங்கை விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழும் குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் ருேதும் குவலயமே ... பாட்டு நின்றது.

  • *

கண்களைத் துடைத்துக்கொண்டார்.மென்சிரிப்பு பூம்பாளே யாய் வெடித்தது. இதுவரை அனுபவித் தறியாத ஒரு பேர மைதி தம் நெஞ்சிடைப் பூத்திருப்பதைப் போலவே அவர் உணரத் தலைப்பட்டார். 'முருகப் பெருமானே ! ...கந்தா... கடம்பா !...' என்று பெயர்ப் பஜனே செய்தவாறு, அங்கிருந்து நகர்ந்தார். மாடிக்கு விரைந்தார். அன்று வந்த யாமினியின் கடிதத்தை அப்பொழுதும் வாசிக்க வேண்டுமென்ற ஆவல் உந்தியது. பீரோவைத் திறந்தார். அந்தக் கடிதக் கூட்டை எடுத்தார்; பிரித்தார்; யாமினியின் கடிதம் அதில் இல்லை. வெறும் கூடுதான் இருந்தது. எங்கே அந்த லெட்டர் : ஆற்ருமையின் நெருக்கம், அவர் தலையைச் சுற்றியது. மணி ஏழு. அப்போது, பலகாரத் தட்டும் கையுமாக மாடிக்கு வக் தான் காசி. வெள்ளித்தட்டைக் கழுவி வைத்தான். பலகாரம் வைப்பதற்கு அனுமதி கோரினன். எல்லாம் நிறைந்த பிறகு அவன் சொன்னதாவது : "கம்பெனியிலே வேலைபார்க்கிற குயில்மொழி தங்கச்சி உங்களைப் பார்க்கிறதுக்கு நேத்து பொழுதோட வந்திச்சு. கம் பெனியிலே ஏதோ தவசல் போலிருக்கு....அங்கே இருக்கிற யாரோ ஒர் இளவட்டம் இதைக் குறிச்சு ஏடா கூடமாய் கண்டபடி ஏசிடுச்சாம் ! உங்களுக்கு போன் பண்ணினதைக் கூட அந்தப்பிள்ளையாண்டான் தடுத்து, போனைப் பறிச்சுப்பிம்